தேர்வில் மோசடி செய்வதை முடிவுக்குக் கொண்டுவருவதை நோக்கமாகக் கொண்ட மோசடி தடுப்புச் சட்டம் 1992 ஆம் ஆண்டே இந்தியாவில் இருந்தது.
பாராளுமன்றத்தில் நேற்று பல்வேறு மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அதில் பொதுத்தேர்வு மற்றும் நுழைவு தேர்வுகளில் முறைகேடு செய்வோருக்கு ஜெயில் தண்டனை மற்றும் அபராதம் விதிக்கும் புதிய மசோதா தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மசோதாவை மத்திய மந்திரி ஜிதேந்திர சிங் தாக்கல் செய்தார். யுபிஎஸ்சி, எஸ்எஸ்சி, ரயில்வே உள்ளிட்ட அரசு பொதுத் தேர்வுகளின் வினாத் தாள்களை கசிய விடுவோருக்கும் ஆள் மாறாட்டம் உள்ளிட்ட மோசடிகளில் ஈடுபடுவோருக்கும் 10 ஆண்டுகள் வரை சிறை, ரூ.1 கோடி அபராதம் விதிக்க சட்டம் கொண்டு வராதே இந்த மசோதா ஆகும்.
இந்த மசோதா அமல்படுத்தப்பட்டு சட்டமானால், முறைகேடுகள் பெருமளவில் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் இந்த சட்டம் 30 ஆண்டுகளுக்கு முன்பே இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது 1992 ஆம் ஆண்டு உத்திர பிரதேசத்தில் கல்யாண் சிங் தலைமையிலான அரசு மோசடி தடுப்புச் சட்டத்தை கொண்டு வந்தது.
கல்யாண் சிங் அமைச்சரவையில் கல்வி அமைச்சராக இருந்த ராஜ்நாத் சிங் இந்த அவசரச் சட்டத்தை முன்மொழிந்தார்.
பள்ளி மற்றும் பல்கலைக் கழகங்களில் பெருமளவில் மோசடி செய்வதை முடிவுக்குக் கொண்டுவருவதை நோக்கமாகக் கொண்ட மோசடி தடுப்புச் சட்டம் 1992 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்டது.
இந்த மோசடி குற்றத்தால் சிறைக்கு செல்லும் மாணவர்கள் ஜாமினில் கூட வெளிவர முடியாத அளவுக்கு இந்த சட்டம் அப்போது கடுமையாக இருந்தது.
1992 ஆம் ஆண்டு சட்டம் அமல்படுத்தப்பட்ட பிறகு தேர்வெழுதிய 12 ஆம் வகுப்பு மாணவர்களில் 14 சதவிகிதம் மற்றும் 10 ஆம் வகுப்பு மாணவர்கள் 30 சதவிகிதம் மாணவர்கள் மட்டுமே தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
சில மாணவர்கள் மோசடியில் சிக்கி சிறைக்கு அனுப்பப்பட்டனர். இது அந்த சமயத்தில் மக்களிடையே பெரும் சலசலப்பைத் தூண்டியது, இதை எதிர்க்கட்சிகள் தங்களுக்கு சாதகமாக எடுத்துக்கொண்டனர்.
பின்னர் இந்த சட்டம் தற்போது கொண்டு வர திட்டமிட்டுவருகிறது.