கோவை கோட்டை ஈஸ்வரன் கோவில் அருகே நடந்த கார் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக, தமிழகத்தின் பல்வேறு இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
கோவை உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோவில் முன்பு கடந்த 2022-ஆம் அண்டு அக்டோபர் மாதம் 23-ஆம் தேதி கார் குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. இந்த குண்டு வெடிப்பிற்கு மூளையாக செயல்பட்ட ஜமேஷா முபீன் காருக்குள் உடல் கருகி உயிரிழந்தார்.
இந்த வழக்கை தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த வழக்கில், தற்போது வரை 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், கோவை கார் குண்டு வெடிப்பு வழக்கு தொடர்பாக, சென்னை, கோவை, திருச்சி, நெல்லை, மதுரை உள்ளிட்ட பல இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.