திரைப்படத்தில் இடம்பெறும் பல்வேறு கதாபாத்திரங்களுக்கு பொருத்தமான நடிகர்களை தேர்வு செய்யும் காஸ்டிங் இயக்குநருக்கு ஆஸ்கார் விருது வழங்க ஆஸ்கார் விருது கமிட்டி திட்டமிட்டுள்ளது.
ஆஸ்கார் விருது, அகாடமி விருது என்றும் அழைக்கப்படுகிறது, இது அமெரிக்க திரைப்பட கலைகள் மற்றும் அறிவியல் அகாடமி (AMPAS) ஆல் திரைப்படத் துறையில் சிறந்து விளங்குவதற்காக வழங்கப்படும் வருடாந்திர விருதாகும்.
அகாடமி விருதுகள் உலகின் மிகவும் பிரபலமான மற்றும் மதிப்புமிக்க விருதுகளில் ஒன்றாகக் கருதப்படுகின்றன. இந்த ஆஸ்கார் விருது திரைத்துறையின் பல பிரிவுகளில் சாதித்தவர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
அதில், அகாடமி ஆஃப் மோஷன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சயின்சஸ் (AMPAS) கவர்னர்கள் குழு, திரைப்படங்களுக்கான நடிகர்கள் தேர்வில் சாதனையை அங்கீகரிக்கும் வகையில் ஆஸ்கார் விருதுக்கு ஒரு புதிய வகையைச் சேர்ப்பதாக அறிவித்துள்ளது.
ஒரு திரைப்படத்தில் இடம்பெறும் பல்வேறு கதாபாத்திரங்களுக்கு பொருத்தமான நடிகர்களை தேர்வு செய்யும் காஸ்டிங் இயக்குநருக்கு வரும் 2026-ஆம் ஆண்டு முதல் விருது வழங்க ஆஸ்கர் விருதுக் குழுவினர் முடிவு செய்துள்ளனர்.
திரைப்படம் ஒன்றை உருவாக்கும் போது ஆரம்ப கட்டத்தில் இருந்து பங்காற்றும் காஸ்டிங் இயக்குநர்களை அங்கீகரித்து கொண்டாடுவதில் ஆஸ்கர் பெருமை அடைவதாக அதன் சி.இ.ஓ. பில் கிராமர் தெரிவித்துள்ளார். இதனிடையே, தங்களுக்கும் ஆஸ்கர் விருதுகளை வழங்க வேண்டும் என்று சண்டைப் பயிற்சி கலைஞர்களும் வலியுறுத்தியுள்ளனர்.