முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் அவர்களின் மருமகனும், மிகச்சிறந்த பன்மொழி எழுத்தாளருமான அமரர் த.சி.க. கண்ணன் திருவுருவப் படத்தை தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை திறந்து வைத்தார்.
இதுதொடர்பாக அவர் எக்ஸ் தளத்தில் விடுத்துள்ள பதிவில், இன்றைய தினம் சென்னையில், முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் அவர்களின் மருமகனும், மிகச்சிறந்த பன்மொழி எழுத்தாளருமான அமரர் த.சி.க. கண்ணன் திருவுருவப் படத் திறப்பு விழாவில் கலந்து கொண்டேன்.
த.சி.க. கண்ணன் பல மொழிகளில் புலமை வாய்ந்தவர். சமஸ்கிருதம், ஹிந்தி முதலானவற்றில் பல புத்தகங்கள் எழுதியவர். மறைந்த பாரதப் பிரதமர் அமரர் வாஜ்பாய் அவர்களுக்கு அறிமுகமானவர். அவரது திருஉருவப் படத்தைத் திறந்து வைக்கும் பெரும் வாய்ப்பை வழங்கியதற்கு, திருமதி மணிமேகலை கண்ணன் அவர்களுக்கும், சகோதரர் Srikantkarunesh அவர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
விழாவிற்குத் தலைமையேற்று, முன்னிலை வகித்து சிறப்புரையாற்றிய இந்திய ஜனநாயக கட்சியின் நிறுவனர் பாரிவேந்தர், புதிய நீதிக் கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகம், நீதியரசர் டி.என். வள்ளிநாயகம், லைஃப் லைன் மருத்துவமனை நிறுவனர் டாக்டர் ராஜ்குமார்,கோபாலபுரம் டி.ஏ.வி.மேல்நிலைப் பள்ளி தாளாளர் விகாஸ் ஆர்யா, வி.ஜி.பி. உலகத் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் நிறுவனர் டாக்டர் வி.ஜி.சந்தோசம் மற்றும் விழாவைச் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்த தமிழகப் புலவர்கள் குழுவினர் அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன் என அண்ணாமலை கூறியுள்ளார்.