19 வயதுக்கு உட்பட்டோருக்கான ஆண்கள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிப் போட்டியில் இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் நாளை மோதவுள்ளன.
மொத்தமாக 16 அணிகள் கலந்துகொண்ட இந்தப் போட்டி தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வந்தது. இந்தத் தொடரில் இறுதிப்போட்டியில் இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் மோதவுள்ளன.
இதுவரை இந்திய அணி 8 முறை இறுதி போட்டிக்கு சென்று 5 முறை உலகக்கோப்பையை வென்றுள்ளது. இது இந்திய அணியின் 9 வது இறுதிப்போட்டியாகும்.
அதேபோல் ஆஸ்திரேலியா இதுவரை 5 முறை இறுதிப்போட்டிக்கு சென்று 3 முறை கோப்பையை வென்றுள்ளது. 2012 மற்றும் 2019 ஆம் ஆண்டு நடந்த உலகக்கோப்பை போட்டியில் இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் மோதின.
இந்த இரண்டு வருடமும் இந்தியாவே கோப்பையை கைப்பற்றியது. இந்நிலையில் இந்த முறையும் இந்த உலகக்கோப்பை இந்தியாவே வெல்லும் என்பது அனைவரின் எதிர்ப்பார்ப்பாக உள்ளது.
இந்நிலையில் கடந்த ஆண்டு நடைபெற்ற சீனியர்களுக்கான ஒரு நாள் உலகக்கோப்பை தொடரின் இறுதி போட்டியில் இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் விளையாடின. அந்த போட்டியில் இந்தியா தான் வெற்றி பெறும் என்று அனைவரும் எண்ணினார். ஆனால் அதற்கு மாறாக அந்த அப்போட்டியில் ஆஸ்திரேலியா 6வது முறையாக கோப்பையை கைப்பற்றியது.
அண்ணன்கள் விட்ட அந்த கோப்பையை தம்பிகள் கைப்பற்றி ஆஸ்திரேலியாவை பழிதீர்ப்பார்கள் என்பதே அனைத்து இந்தியர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.