நாளை சென்னை வரும் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தலைமையில் முக்கிய ஆலோசனை .கூட்டம் நடைபெற உள்ளதாக தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை சென்னையில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், நாளை சென்னையில் நடைபெற உள்ள என் மண் என் மக்கள் யாத்திரை மற்றும் பொதுக்கூட்டத்தில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா பங்கேற்க உள்ளார்,
என் மண் என் மக்கள் நடைப்பயணத்தால் பொதுமக்கள் யாரும் பாதிக்கப்படக் கூடாது. இதில் நாங்கள் தெளிவாக இருக்கிறோம். நாளை சென்னை வரும் பா.ஜ.க தலைவர் ஜே.பி.நட்டா தலைமையில் முக்கிய ஆலோசனை நடைபெறுகிறது.
நாடாளுமன்றத்தில், டி.ஆர்.பாலுவுக்கு மத்திய அமைச்சர் எல். முருகன் பதில் கூறினார். அதை ஏற்பதும் ஏற்காததும் டி.ஆர்.பாலுவின் விருப்பம். அவரது உடல் மொழி, அதாவது எல்.முருகனைப் பார்த்து, இந்த அரங்கத்தில் இருப்பதற்கே உனக்குத் தகுதி இல்லை என்று கூறியுள்ளார். அன்ஃபிட் என்றால் அதை எந்தக் கோணத்தில் எடுத்துக் கொள்வது? டி.ஆர்.பாலு முருகனிடம் காழ்ப்புணர்ச்சியோடு நடந்து கொண்டது என்பதே எங்களது குற்றச்சாட்டு.
கடந்த சில தினங்களுக்கு முன்பு, தலைமைச் செயலாளரை பார்த்துவிட்டு வெளியே வந்த டி.ஆர்.பாலு, நாங்கள் என்ன தீண்டதகாதவர்களா என்று பேசினார். அதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
மேலும், மாற்றுக் கட்சிகளின் உட்கட்சி விவகாரங்களில் பா.ஜ.க எப்போதும் தலையிடாது. பிரதமர் மோடி மீது ஓபிஎஸ் மிகுந்த மரியாதை வைத்துள்ளார். கூட்டணி தொடர்பாக முன்னாள் முதல்வர் ஓ.பி.எஸ் கூறுவது அவரது தனிப்பட்ட கருத்து என அண்ணாமலை கூறினார்.