மீனவ சமூக மக்களை, இதற்கு முன்பு இருந்த ஆட்சியாளர்கள் வெறும் வாக்கு வங்கிகளாக மட்டுமே பார்த்தனர்! - அண்ணாமலை
Aug 20, 2025, 02:12 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மீனவ சமூக மக்களை, இதற்கு முன்பு இருந்த ஆட்சியாளர்கள் வெறும் வாக்கு வங்கிகளாக மட்டுமே பார்த்தனர்! – அண்ணாமலை

Web Desk by Web Desk
Feb 11, 2024, 01:45 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கடந்த 2004 – 2014, திமுக, காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில், மாநிலங்களுக்கு வழங்கப்பட்ட வரிப் பங்கீடு 32% மட்டுமே எனப் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

ஊழலுக்கு எதிரான அண்ணாமலையின் ”என் மண் என் மக்கள்” பாதயாத்திரை பொன்னேரி சட்டமன்றத் தொகுதியில் நடைப்பெற்றது. இந்த பாதயாத்திரையில் ஆயிரக்கணக்காணோர் பங்கேற்றனர்.

கூட்டத்தில் பேசிய அண்ணாமலை, 

வட காஞ்சி என்றழைக்கப்படும் மீஞ்சூரில் வரதராஜ பெருமாள் கோவில், பழவேற்காடு ஏரி என சிறப்பு வாய்ந்த தொகுதி பொன்னேரி.

கடந்த 2004 – 2014, திமுக, காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில், மாநிலங்களுக்கு வழங்கப்பட்ட வரிப் பங்கீடு 32% மட்டுமே. இன்று பாரதப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக ஆட்சியில், மாநிலங்களுக்கு வழங்கப்படும் வரிப் பங்கீடு 42% ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

கடந்த 2004 – 2014 காலகட்டத்தில், திமுக காங்கிரஸ் கூட்டணி அரசு, தமிழகத்துக்கு வழங்கிய வரிப் பங்கீடு ரூ. 94,977 கோடி மட்டுமே. 2014 முதல் 2024 வரையிலான பத்து ஆண்டுகளில், பிரதமர் மோடி அவர்கள் தலைமையிலான மத்திய அரசு வழங்கிய வரி பங்கீடு ரூ.2,77,444 கோடி. 192% அதிகமாக தற்போது வழங்கப்பட்டுள்ளது.

2004 – 2014 வரை தமிழகத்துக்கு வழங்கிய உதவித்தொகை ரூ. 57,924.42 கோடி மட்டுமே. 2014 – 2023 வரையிலான ஒன்பது ஆண்டுகளில், தமிழகத்துக்கு வழங்கிய உதவித்தொகை, 2,30,893 கோடி. 300% அதிகமாக தற்போது வழங்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி, ரூ.6,412.15 கோடி தமிழக உட்கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக 50 ஆண்டுகளுக்கு வட்டியில்லாக் கடன் உதவியாக நமது மத்திய அரசு வழங்கியுள்ளது. கடந்த 9 ஆண்டுகளில், தமிழகத்திற்கான திட்டங்கள், உதவித் தொகை மற்றும் நிதி பங்கீட்டின் மதிப்பு, ரூ.10.76 லட்சம் கோடி ரூபாய்க்கும் மேல்.

தமிழகத்தின் நேரடி வரிப் பங்களிப்பான 5.16 லட்சம் கோடியை விட இரண்டு மடங்கு அதிகமாக நமது பிரதமர் மோடி அரசு திரும்பிக் கொடுத்துள்ளது. இதன் விவரங்களை வெள்ளை அறிக்கையாகவும் வெளியிட்டுள்ளது. திமுகவின் பொய்களை இனியும் நம்பி ஏமாற மக்கள் தயாராக இல்லை.

நீர் மேலாண்மைக்கு தனி அமைச்சகம், மீனவர் நலன் காக்க தனி அமைச்சகம், ரூ.28 லட்சம் கோடி முத்ரா கடனுதவி, 7 கோடி மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு, ரூ.7.2 லட்சம் கோடி ரூபாய் கடனுதவி, Make in India திட்டத்தின் மூலமாக இந்தியாவை நோக்கி உலக நாடுகளை வரச்செய்தது, கடந்த 9 ஆண்டுகளில் 25 கோடி மக்களை, ஏழ்மை நிலையிலிருந்து வெளிவரச் செய்தது என, நமது பிரதமர் செய்த சாதனைகள் ஏராளம்.
கடந்த 2014 ஆம் ஆண்டு உலகில் 11 ஆவது பெரிய பொருளாதார நாடாக இருந்த இந்தியா, உலகின் மூன்றாவது பெரிய நாடாக உருவாக இன்னும் 30 ஆண்டுகள், அதாவது 2044 ஆம் ஆண்டு வரை தேவைப்படும் என்று காங்கிரஸ் கட்சி கூறியது.

ஆனால் பாஜக ஆட்சியில், ஒன்பது ஆண்டுகளில் இந்தியாவை ஐந்தாவது பெரிய பொருளாதார நாடாக மாற்றியிருக்கிறோம். வரும் பாராளுமன்றத் தேர்தலில் மீண்டும் நமது  பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் மூன்றாவது முறையாகப் பிரதமர் பொறுப்பேற்ற அடுத்த நான்கு ஆண்டுகளில், அதாவது 2028 ஆம் ஆண்டில், இந்தியா உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக உயர்ந்திருக்கும்.

காங்கிரஸ் கட்சி முப்பது ஆண்டுகளில் வைத்த இலக்கை, பாஜக ஆட்சியில், நமது நாடு 14 ஆண்டுகளில் அடையப் போகிறது. நமது பாரதப் பிரதமர் மோடி, கடந்த பாராளுமன்றத் தேர்தலின்போது கொடுத்த 295 வாக்குறுதிகளையும் நிறைவேற்றியிருக்கிறார்.

ராமர் கோவில், காஷ்மீரில் சட்டப்பிரிவு 370 நீக்கம், அரபு நாடுகளில் எல்லாம் நீக்கப்பட்ட தலாக் முறையை ஒழித்து, இஸ்லாமியச் சகோதரிகளுக்குச் சட்டப் பாதுகாப்பு கொடுத்தது என, 60 ஆண்டுகளாகத் தீர்க்காமல் வைத்திருந்த சிக்கல்கள் அனைத்திற்கும் தீர்வு கண்டுள்ளார்.

வரும் பாராளுமன்றத் தேர்தலில், 400 க்கும் அதிகமான இடங்கள் பெற்று நமது பாரதப் பிரதமர் நரேந்திர மோடி மூன்றாவது முறையாகப் பிரதமர் பொறுப்பேற்பது உறுதி. நமது பிரதமர் கரங்களை வலுப்படுத்த, ஊழல், குடும்ப அரசியல் கட்சிகளைப் புறக்கணித்து, தமிழகம் முழுவதும் இம்முறை துணை நிற்பதும் உறுதி எனத் தெரிவித்துள்ளார்.

Tags: bjpbjp k annamalaiannamalai en mann en makkal rally
ShareTweetSendShare
Previous Post

பாரதத்தை உற்று நோக்கும் உலக நாடுகள் : ஆளுநர் ஆர்.என்.ரவி பெருமிதம்!

Next Post

அண்ணாமலையார் கோவிலில் சாமி தரிசனம் செய்தார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்!

Related News

யானையுடன் கைகோர்க்கும் டிராகன் : இந்தியாவிற்கான ஏற்றுமதி தடையை நீக்கிய சீனா!

அம்பலமான ட்ரம்பின் இரட்டை வேடம் : உக்ரைனுக்கு 8 லட்சம் கோடிக்கு ஆயுதங்களை விற்கும் அமெரிக்கா!

அமெரிக்காவுக்கு “செக்” : அஜித் தோவல் -வாங் யீ சந்திப்பு – இந்திய-சீன உறவில் திருப்பம்!

தர்மஸ்தலா கோவிலுக்கு அவப்பெயர் ஏற்படுத்த நடந்த முயற்சி அம்பலம் : சடலங்களை புதைத்ததாக கூறியவர் “பல்டி” – விசாரணையில் திருப்பம்!

மு.க.ஸ்டாலின் Vs தேர்தல் ஆணையம்!

பார்வையை பறித்த ஒட்டுண்ணி : அரைகுறையாக சமைத்த உணவால் விபரீதம்!

Load More

அண்மைச் செய்திகள்

துாங்கும் மாநகராட்சியால் துயரம் : பராமரிப்பு இல்லாததால் பாழாய் போன நிழற்குடை!

மாரத்தானில் அசத்தல் : பதக்கங்களை குவித்து சாதிக்கும் இரட்டையர்கள்!

தொடர் வானிலை சீற்றங்களால் உருக்குலைந்த இமாச்சல் : சுற்றுச்சூழல் ஆய்வாளர்கள் கூறும் அதிர்ச்சி பின்னணி!

தமிழக அரசு மீது மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் குற்றச்சாட்டு!

வரலாறு காணாத மழையால் தத்தளிப்பு : மும்பையில் முடங்கிய மக்களின் இயல்பு வாழ்க்கை!

சிலை வைத்து விநாயகர் சதுர்த்தி கொண்டாட அனுமதி : சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

ஓக்லா தடுப்பணை வழியாக தண்ணீர் வெளியேற்றம்!

மீரட்டில் ராணுவ வீரரை தாக்கிய சுங்கச்சாவடி ஊழியர்கள்!

உருவாகி வரும் 40 மாடி உயர ராக்கெட் – இஸ்ரோ தலைவர்

உக்ரைன் – அமெரிக்க அதிபர்கள் சந்திப்பு : டொனெட்ஸ்க்கில் FAB-500 ரக குண்டுகளை வீசி ரஷ்ய ராணுவம் தாக்குதல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies