கேரள மாநிலம் கோழிக்கோட்டில் ஆற்றில் குளிக்க சென்ற சிறுவன் உட்பட 3 பேர், நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் குன்னமங்கலத்தில் சிறுவன் உட்பட 3 பேர் ஆற்றில் குளிக்க சென்றனர். சிறுவன் குளிப்பதற்காக ஆற்றில் இறங்கியபோது, திடீரென நீரில் அடித்துச் செல்லப்பட்டான்.
இதனையடுத்து அடுத்து, சிறுவனைக் காப்பாற்ற மற்ற இருவரும் முயன்றனர். அப்போது, அவர்களும் நீரில் மூழ்கினர். அப்பகுதியில் இருந்தவர்கள் மூவரையும் மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக அறிவித்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
குன்னமங்கலத்தைச் சேர்ந்த சிந்து, அவரது மகள் அதிரா மற்றும் அவர்களது உறவினரான 13 வயது சிறுவன் அத்வைத் ஆகியோர் ஆற்றில் மூழ்கி உயிரிழந்தனர்