தமிழகம் வரும் பிரதமர் மோடி முன்னிலையில் காங்கிரஸ் எம்.எல்.ஏ. விஜயதாரணி, பா.ஜ.க-வில் இணைகிறார்.
வரும் 25 -ம் தேதி பல்லடத்தில் பிரம்மாண்டமாக நடக்க உள்ள பா.ஜ.க கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு பேசுவார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகம் முழுவதிலும் இருந்து சுமார் 10 லட்சம் பேர் இந்த கூட்டத்தில் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், பிரதமர் மோடி வருகைக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என பா.ஜ.க தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், விளவங்கோடு தொகுதியில் 3 முறை வெற்றி பெற்ற காங்கிரஸ் எம்.எல்.ஏ-வான விஜயதாரணி, பா.ஜ.க-வில் இணைய உள்ளார் என பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.
தமிழக காங்கிரஸ் கட்சியில் தனக்கு உரிய மரியாதை தரவில்லை என கடந்த சில மாதங்களாக வருத்தத்தில் இருந்தார் விஜயதாரணி. இந்த நிலையில், இந்த மாதம் தமிழகம் வரும் பிரதமர் மோடி முன்னினையில் பா.ஜ.க-வில் இணைகிறார் என வெளியான தகவலால் காங்கிரஸ் கட்சியினர் கடும் அதிர்ச்சியில் உள்ளனர்.