வெற்றி துரைசாமியின் உடலுக்கு இன்று மாலை இறுதி சடங்கு!
Sep 12, 2026, 11:36 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வெற்றி துரைசாமியின் உடலுக்கு இன்று மாலை இறுதி சடங்கு!

Murugesan M by Murugesan M
Feb 13, 2024, 11:18 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

இமாச்சலின் சட்லஜ் நதியில் 8 நாட்களுக்கு பிறகு சைதை துரைசாமியின் மகன் வெற்றி  துரைசாமியின் சடலம் கண்டெடுக்கப்பட்டத்தை அடுத்து குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. இன்று மாலை சென்னையில் இறுதி சடங்கு செய்யப்படுகிறது.

சென்னை மாநகராட்சி அதிமுக முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் ஒரே மகன் வெற்றி துரைசாமி (45). இவர் கடந்த 4ம் தேதி இமாச்சல பிரதேசத்திற்கு தனது நண்பர் திருப்பூரைச் சேர்ந்த கோபிநாத்துடன் சுற்றுலா சென்றிருந்தார்.

இமாச்சலின் லாஹஸ் ஸ்பிதி பகுதியைச் சேர்ந்த ஓட்டுநர் தன்ஜினின் காரில் காசா பகுதியை சுற்றிப் பார்த்த இவர்கள் சிம்லாவுக்கு திரும்பிக் கொண்டிருந்தனர்.

கடந்த பிப்ரவரி 04 ஆம் தேதி இமாச்சல பிரதேசம் கின்னுர் மாவட்டத்தில் பயணம் செய்து கொண்டிருந்தபொழுது வாகனம் 200 அடி பள்ளத்தாக்கில் விழுந்து சட்லஜ் ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், கார் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

கோபிநாத் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். ஆனால், வெற்றி துரைசாமி குறித்து எந்த தகவலும் இல்லை. ஆகையால் அவரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வந்தது.

இந்நிலையில்,  கடந்த 8 நாட்களாக அவரை தேடும் பணியில் தேசிய பேரிடம் மீட்பு குழுவினர் மற்றும்  ஸ்கூபா டைவிங் செய்யும் நீர்மூழ்கி வீரர்கள் ஈடுபட்டிருந்தனர். முதலில் அவரது உடைமைகள், செல்போன் கைப்பற்றிய நிலையில் 8வது நாளான நேற்று 5 கிலோ மீட்டர் தொலைவில் பாறைக்கு அடியில் சிக்கியிருந்த வெற்றி துரைசாமியின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.  மீட்பு படை வீரர்கள் அவரது உடலை மீட்டனர்.

இதனையடுத்து வெற்றி துரைசாமியின் சடலத்தை சிம்லா இந்திரா காந்தி மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்ட பிறகு அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

இதனையடுத்து வெற்றி துரைசாமியின் உடல், ஏர் ஆம்புலன்ஸ் விமானம் மூலம் இன்று சென்னை கொண்டு வரப்படுகிறது. பின்னர் இன்று மாலை அவரது சி. ஐ. டி. நகர்  இல்லத்தில், 5 மணிக்கு பொது அஞ்சலிக்காக வைக்கப்பட்டு 6 மணிக்கு கண்ணம்மாபேட்டை மயான பூமியில் தகனம் செய்யப்படுகிறது.

Tags: Vetri Duraisamy's body recovered after 8 days!
Share
Tweet
SendShare
Previous Post

சட்டப்பேரவையில் சபாநாயகர் நடந்து கொண்ட விதம் தவறு : தமிழிசை சௌந்தரராஜன்

Next Post

பா.ஜ.க-வில் இணையும் காங்கிரஸ் எம்.எல்.ஏ. விஜயதாரணி!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies