பாரதம் அறிமுகப்படுத்திய யுபிஐ பணபரிவர்த்தனை தற்போது பல்வேறு நாடுகள் பயன்படுத்த தொடங்கியுள்ளன.
2016-ம் ஆண்டு மத்திய அரசு யுபிஐ கட்டமைப்பை நடைமுறைப்படுத்தியது. தற்போது இளைஞர்களை முதல் முதியவர்கள் வரை கையில் பணம் வைத்துக்கொள்வதில்லை. பெரிய வணிக வளாகங்கள் முதல் சிறிய பெட்டிக்கடைகள் வரையில் யுபிஐ பரிவர்த்தனை பிரதானமாக மாறியுள்ளது.
ரொக்கமாக பணம் கையில் இல்லாவிட்டாலும், செல்போன் இருந்தால் போதும். நாட்டின் எப்பகுதிக்கு சென்றாலும் பணபரிவர்த்தனை செய்ய முடியும் என்ற நிலை உள்ளது. இதற்கு காரணம் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் டிஜிட்டல் புரட்சி என்று கூறலாம். பணப் பரிவர்த்தனை தொழில்நுட்பத்தில் இந்தியாவின் யுபிஐ கட்டமைப்பானது உலக அளவில் முன்னுதாரணமாக திகழ்கிறது.
இந்நிலையில், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் சென்ற பிரதமர் மோடி, அபுதாபியில் UPI RuPay card பணப்பரிவர்த்தனையை தொடங்கி வைத்தார். இதேபோல், இலங்கை மற்றும் மொரிஷியஸில் யுபிஐ பணப் பரிவர்த்தனை சேவை தொடங்கப்பட்டுள்ளது. இதனை பிரதமர் நரேந்திர மோடி, இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே, மொரிஷியஸ் பிரதமர் பிரவிந்த் ஜக்நாத் ஆகியோர் காணொலி வாயிலாக தொடங்கி வைத்தனர். மொரீஷியஸில் ரூபே கார்டு சேவையும் தொடங்கப்பட்டது.
கடந்த வாரம், பிரான்ஸ் நாட்டின் சுற்றுலத்தலமான ஈஃபிள்டவரில் யுபிஐ சேவை அறிமுகப்படுத்தப்பட்டது. ஈஃபிள் டவரை காணச் செல்லும் இந்தியப் பயணிகள், அதற்கான கட்டணத்தை தங்கள் மொபைலில் உள்ள யுபிஐ செயலி மூலம் ரூபாயிலேயே செலுத்த முடியும். இதன் தொடர்ச்சியாக, ஐரோப்பாவில் உள்ள சுற்றுலா மையங்களில், இந்திய பயணிகளுக்கு பயன்படும் வகையில் யுபிஐபரிவர்த்தனையை நடைமுறைப்படுத்த மத்திய அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது.
பிரான்ஸ், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், மொரிஷியஸ், இலங்கை, சிங்கப்பூர், பூட்டான் மற்றும் நேபாளம் ஆகிய நாடுகள் UPI கட்டணத்தை ஏற்றுக்கொள்கின்றன என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது. இனி இந்த நாடுகளுக்குள் சுற்றுலா செல்வோருக்கு கவலையில்லை. யுபிஐ சேவையை பயன்படுத்தலாம்.
இதேபோல் கடந்த ஆண்டு ஜப்பானும் இந்தியாவின் UPI கட்டண முறைமையில் இணைய விருப்பம் தெரிவித்துள்ளது. மத்திய அரசின் இந்த நடவடிக்கையின் மூலம், மேக் இன் இந்தியா போல், மேக் ஃபார் தி வேர்ல்ட்’ என்பதைக் காட்டுகிறது என்றால் அது மிகையில்லை