டெல்லியில் காங்கிரஸ் ஒரு தொகுதியில் கூட போட்டியிட தகுதி இல்லை என ஆம் ஆத்மி கட்சி தெரிவித்துள்ளது.
மேற்கு வங்க மாநிலத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தனித்து போட்டியிடும் என்று மம்தா பானர்ஜி அறிவித்தார். அதை தொடர்ந்து இண்டி கூட்டணியை உருவாக்கிய ஐக்கிய ஜனதாதள தலைவருமான நிதிஷ்குமார் அதில் இருந்து விலகி பாஜக அணிக்கு தாவினார். இதனைத்தொடர்ந்து பஞ்சாப்பில் ஆம் ஆத்மி கட்சி தனித்து போட்டியிடும் என்று அறிவித்தது.
இந்நிலையில், டில்லியில் தொகுதி பங்கீடு குறித்து ஆம் ஆத்மி கட்சி எம்.பி., சந்தீப் பதக் கூறியதாவது: டில்லியில் ஒரு தொகுதியில் போட்டியிடுவதற்கு கூட காங்கிரஸ் கட்சிக்கு தகுதி இல்லை.
ஆனால், கூட்டணி தர்மத்திற்காக ஒரு தொகுதி வழங்க தயாராக உள்ளோம். டில்லியில் ஆம் ஆத்மி 6 தொகுதிகளிலும், காங்கிரஸ் ஒரு தொகுதியிலும் போட்டியிடும் திட்டத்தை முன்மொழிந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.