செந்தில் பாலாஜி வழக்கு - மீண்டும் நாளை விசாரணை!
Mar 15, 2026, 02:50 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

செந்தில் பாலாஜி வழக்கு – மீண்டும் நாளை விசாரணை!

Murugesan M by Murugesan M
Feb 14, 2024, 05:52 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கடந்த அ.தி.மு.க ஆட்சியில், அதாவது 2011 – 2015-ம் ஆண்டு போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, சட்ட விரோதமாக வேலை வாங்கித் தருவதாகக் கோடிக்கணக்கில் பணம் பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக, தமிழக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இந்த நிலையில், இந்த வழக்கில் அமலாக்கத்துறையும் தன்னை இணைத்துக் கொண்டது. இதனைத் தொடர்ந்து, அமைச்சர் செந்தில் பாலாஜி, அவரது தம்பி அசோக் குமார் உள்ளிட்டோர் வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி, பல முக்கிய ஆவணங்களை கைப்பற்றியது.

அதன் பேரில், அமைச்சர் செந்தில் பாலாஜி மீது சட்ட விரோத பணப் பரிமாற்ற வழக்கில், அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்து, கடந்த ஜூன் 14 -ம் தேதி கைது செய்தது.

இதனால், அவரது தம்பி அசோக் குமார் தலைமறைவானார். புழல் சிறையில் அடைக்கப்பட்டு இருந்த நிலையில், இலாகா இல்லாத அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்ந்தார். இந்த நிலையில், இலாகா இல்லாத அமைச்சர் செந்தில் பாலாஜி தனது அமைச்சர் பதவியை நேற்று ராஜினாமா செய்தார்.

இதனிடையே, சென்னை உயர் நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் மனுவுக்கு அமலாக்கத்துறை தரப்பு பதில் மனு தாக்கல் செய்தது. அதில், ஒரே காரணத்தை அடிப்படையாக வைத்து மீண்டும் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

எனவே, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை விசாரிப்பதற்கு பதிலாக இந்த வழக்கை விரைவாக விசாரணையை விரைந்து முடிக்க இந்த நீதிமன்றம் உத்தரவிட வேண்டும். காலம் கடந்து கொண்டிருக்கிறது என்ற காரணத்தை மட்டும் அடிப்படையாக வைத்து தொடர்ந்து ஜாமீன் மனு தாக்கல் செய்ய முடியாது.

மேலும், செந்தில் பாலாஜியின் தம்பி அசோக் குமாரும் தலைமறைவாக உள்ள நிலையில், செந்தில் பாலாஜியும் ஜாமீனில் வெளியேவிட்டால் சாட்சிகளுக்கு பாதிப்பு ஏற்படும் என அமலாக்கத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதனைத்தொடர்ந்து, செந்தில் பாலாஜி ஜாமீன் வழக்கில் நாளை பிற்பகல் மீண்டும் விசாரணை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags: dmk senthil balaji
ShareTweetSendShare
Previous Post

டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு 6-வது முறையாக சம்மன்! – அமலாக்கத் துறை

Next Post

நாட்டின் பிரதமர்களின் வாழ்க்கையை பார்த்து இளைய தலைமுறையினர் உத்வேகம் பெறுவார்கள்! – ராஜ்நாத் சிங்

Related News

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – காவல் அதிகாரி கைது!

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

Load More

அண்மைச் செய்திகள்

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

குரு சாமி பள்ளம் விவகாரம்… அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்!

சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் பூஜை காலத்தின்போது விற்பனை செய்யப்பட்ட நெய்யில் லட்சக்கணக்கில் முறைகேடு!

தமிழகத்தில் நேற்று நடைபெற்ற தேசிய லோக் அதாலத்தில் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 366 வழக்குகளுக்கு தீா்வு

எங்கே போகும் இந்த பாதை…! – சந்திசிரிக்கும் சட்டம் ஒழுங்கு….ரீல்ஸ் மோகத்தில் முதல்வர்

ஐம்பொன் சிலைகளுக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி வரிகளை மாற்றி அமைத்து தரும்படி மத்திய சட்ட அமைச்சரிடம் சிலை தயாரிப்பாளர்கள் கோரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies