டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு 6-வது முறையாக சம்மன்! - அமலாக்கத் துறை
Sep 12, 2026, 10:10 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு 6-வது முறையாக சம்மன்! – அமலாக்கத் துறை

Murugesan M by Murugesan M
Feb 14, 2024, 05:48 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு வரும் 19ம் தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு அமலாக்க இயக்குனரகம் ஆறாவது சம்மன் அனுப்பியுள்ளது.

தலைநகர் டெல்லியில் கடந்த 2021ஆம் ஆண்டு வகுக்கப்பட்ட மதுபான கொள்கை முடிவுகளில் தனியாருக்கு லாபம் ஏற்படும் வகையில் அரசு செயல்பட்டதாகவும் இதனால் அரசுக்கு கோடிக்கணக்கான ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டதாகவும் கூறப்பட்டது. இது தொடர்பாக டெல்லி துணை நிலை ஆளுநர் விகே சக்சேனா அளித்த புகாரில் சிபிஐ வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

மேலும், இந்த விவகாரத்தில் சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடந்து இருப்பதாக அமலாக்கத்துறையும் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இதில் டெல்லி அமைச்சர்கள் சத்தியேந்திர ஜெயின், மணீஷ் சிசோடியா உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக விசாரணைக்கு ஆஜராகுமாறு டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. அதைத் தொடர்ந்து, 5 முறை அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியும் அவர் ஆஜராகாமல் புறக்கணித்து வந்தார்.

கடைசியாக பிப்ரவரி 5ஆம் தேதி மதுபான ஊழல் வழக்கில் விசாரணைக்கு ஆஜராகுமாறு அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி இருந்தது. இருப்பினும் அவர் ஆஜராகாமல் புறக்கணித்தார். இதற்கு முன் கடந்த ஜனவரி 18ஆம் தேதி மற்றும் அதற்கு முன்னர் கடந்த ஆண்டு ஜனவரி 3, நவம்பர் 2 மற்றும் டிசம்பர் 21ஆம் தேதி ஆகிய தேதிகளிலும் அமலாக்கத்துறை அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு சம்மன் அனுப்பி இருந்தது.

இருப்பினும் தொடர்ச்சியாக அவர் அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜராகாமல் தவிர்த்து வந்தார். இந்நிலையில், டெல்லி ரோஸ் அவன்யூ நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அரவிந்த் கெஜ்ரிவால் மீது புகார் அளித்து உள்ளனர். பண மோசடி வழக்கு தொடர்பாக விசாரணைக்கு ஆஜராகுமாறு 5 முறை சம்மன் அனுப்பியும் அரவிந்த் கெஜ்ரிவால் ஆஜராகாமல் புறக்கணித்து வருவதாக அமலாக்கத்துறை தாக்கல் செய்யப்பட்ட மனுவில் குறிப்பிடப்பட்டு இருந்தது.

மனுவை விசாரணைக்கு எற்றுக் கொண்ட நீதிபதிகள், வழக்கு தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்யுமாறு அமலாக்கத் துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு வழக்கின் அடுத்த கட்ட விசாரணையை ஒத்திவைத்தனர். பிப்ரவரி 7 வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த நிலையில், அமலாக்கத்துறை அதிகாரிகள் 5 முறை சம்மன் அனுப்பியும் விசாரணைக்கு ஏன் ஆஜராகவில்லை என அரவிந்த் கெஜ்ரிவால் தரப்பிடம் கேள்வி எழுப்பினர்.

தொடர்ந்து பிப்ரவரி 17ஆம் தேதி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி விசாரணைக்கு ஆஜராகாதது குறித்து தெரிவிக்க வேண்டும் என சம்மன் அனுப்ப உத்தரவிட்டனர்.

இந்நிலையில் 5 முறை சம்மன் அனுப்பி கெஜ்ரிவால் ஆஜராகாமல் இருந்த நிலையில், தற்போது அவருக்கு 6-வது முறையாக அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியுள்ளது.

Tags: EdEnforcement departmentaravind kejriwal
Share
Tweet
SendShare
Previous Post

டாஸ்மாக் கடைக்கு எதிராக பா.ஜ.க போராட்டம்!

Next Post

செந்தில் பாலாஜி வழக்கு – மீண்டும் நாளை விசாரணை!

Related News

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

Load More

அண்மைச் செய்திகள்

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

ஈரான் அதிபர் மசூத் பெசஷ்கியானுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை!

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies