இந்தியா தற்சார்பு அடைய உறுதி பூண்டுள்ளது! - குடியரசுத் தலைவர்
Jul 5, 2025, 07:16 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

 இந்தியா தற்சார்பு அடைய உறுதி பூண்டுள்ளது! – குடியரசுத் தலைவர்

Web Desk by Web Desk
Feb 15, 2024, 11:41 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றுவதில் பெண்கள் முக்கியப் பங்கு வகிப்பார்கள் எனக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தெரிவித்துள்ளார்.

ராஜஸ்தான் மாநிலம் பெனேஷ்வர் கோவிலில் நேற்று பிப்ரவரி 14, 2024 ராஜஸ்தானின் பல்வேறு சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த பழங்குடியின பெண்கள் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பங்கேற்று சிறப்புரையாற்றினார்.

கூட்டத்தில் உரையாற்றிய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு,

இந்தியா தற்சார்பு அடைய உறுதி பூண்டுள்ளது என்று கூறினார். ஒவ்வொரு துறையும் தற்சார்புடன் இருந்தால் மட்டுமே இந்தியா தற்சார்புடன் இருக்க முடியும் என்று தெரிவித்தார்.

சுய உதவிக் குழுக்கள் மற்றும் அவர்களுடன் தொடர்புடைய அனைவரையும் தற்சார்பை ஊக்குவிப்பதற்காக அவர் பாராட்டினார். சுய உதவிக் குழுக்கள் பணிச்சூழல் வளத்தை அளிப்பது மட்டுமின்றி, மனித வளம் மற்றும் சமூக வளத்தை உருவாக்குவதில் பாராட்டத்தக்க பணியையும் செய்து வருவது குறித்து அவர் மகிழ்ச்சி தெரிவித்தார்.

பழங்குடியின சமுதாயத்திலிருந்து சமூகத்தின் மற்ற பிரிவினரும் நிறைய கற்றுக்கொள்ள முடியும் என்று குடியரசுத்தலைவர் கூறினார். பழங்குடியின சமூகங்கள் தற்சார்பு நிர்வாகத்திற்கு நல்ல உதாரணங்களை ஏற்படுத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இயற்கையோடு இணைந்து எப்படி மகிழ்ச்சியாக வாழ்வது என்பதை நாம் அவர்களிடமிருந்து கற்றுக்கொள்ளலாம் என்று கூறினார். இயற்கைக்கு தீங்கு விளைவிக்காமல், குறைந்தபட்ச வளங்களுடன் வாழ நாம் அவர்களிடமிருந்து கற்றுக்கொள்ளலாம் என்றும்,  மகளிருக்கு அதிகாரமளித்தல் பற்றியும் நாம் அறிந்து கொள்ளலாம் என்று தெரிவித்தார்.

பெண்கள் தலைமையிலான வளர்ச்சி என்ற சிந்தனையை நடைமுறைப்படுத்த ஒட்டுமொத்த சமூகமும் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்று கூறினார்.

பெண்கள் மத்தியில் கல்வி, திறன் மேம்பாட்டை ஊக்குவிக்க வேண்டும் என்று கூறிய அவர், இதனால், பெண்கள் நாட்டின் முன்னேற்றத்திலும், உலக முன்னேற்றத்திலும் சம பங்காளிகளாக மாற முடியும் என்று தெரிவித்தார்.

இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றுவதில் பெண்கள் முக்கியப் பங்கு வகிப்பார்கள் என்று அவர் கூறினார். அவர்களின் வெற்றியின் வலிமையில்தான் இந்தியாவின் எதிர்காலம் பிரகாசமாக இருக்கும் என்று குறிப்பிட்டார்.

Tags: President Draupadi Murmu
ShareTweetSendShare
Previous Post

சந்தேஷ்காளியில் பெண்களுக்கு எதிரான வன்முறை : விசாரணை குழுவை அமைத்தது பாஜக! 

Next Post

மேட்டூர் அணை: நீர்மட்டம் 65.73 அடியாக குறைந்தது!

Related News

திமுகவின் திறனற்ற ஆட்சியில் கல்வித்துறை சீரழிந்து வருகிறது : நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

திருப்புவனம் காவல்நிலைய மரணம் : பணியிடை நீக்கம் செய்யப்பட்ட டிஎஸ்பி-யிடம் நீதிபதி விசாரணை!

புரி ஜெகந்நாதர் கோயில் ரத உற்சவம் கோலாகலம்!

பிரபல யூடியூபர் சுதர்சன் மீது மனைவி வரதட்சணை புகார்!

டெல்லி : 3 பேர் சடலமாக மீட்பு – போலீசார் விசாரணை!

இந்திய விண்வெளி வீரர் சுபன்ஷு சுக்லாவின் புதிய புகைப்படங்கள் வெளியீடு!

Load More

அண்மைச் செய்திகள்

ஆட்டோ வடிவிலான புதிய ஆடம்பர பை : சமூக வலைத்தள வாசிகள் கிண்டல்!

உத்தரப்பிரதேசம் : இரும்பு கதவு விழுந்து காவலாளி பலி – சிசிடிவி வெளியீடு!

தலாய் லாமாவின் பிறந்தநாள் விழா – மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு பங்கேற்பு!

கஞ்சா அடிப்பதை தட்டிக் கேட்ட அதிமுக நிர்வாகி மீது தாக்குதல்

புதிய படத்தில் தனுஷுக்கு ஜோடியாகும் பூஜா ஹெக்டே?

இமாச்சல பிரதேசத்தை புரட்டிப்போட்ட பருவமழை : 69 பேர் பலி, 37 பேர் மிஸ்சிங்- ரூ. 700 கோடி சேதம்!

கடலூர் : என்எல்சியின் 24-வது புத்தக கண்காட்சி தொடக்கம்!

‘இந்திரா’ படத்தின் அறிமுக வீடியோ வெளியீடு!

மகாராஷ்டிரா : மராத்தி கற்க முடியாது என கூறிய முதலீட்டாளரின் நிறுவனம் சூறை!

நீலகிரி : சாலையில் சென்ற காரை முட்டி சேதப்படுத்திய காட்டு யானை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies