2024 மக்களவை தேர்தலில் தேசிய மாநாட்டு கட்சி தனித்து போட்டியிடும் என ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் பரூக் அப்துல்லா அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சரும்,தேசிய மாநாட்டு கட்சி தலைவருமான பரூக் அப்துல்லா செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, இண்டி கூட்டணி தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும், எனவே தேசிய மாநாட்டு கட்சி தனித்து போட்டியிடும் என அவர் தெரிவித்தார். மக்களவை தேர்தலுடன், சட்டப்பேரவை தேர்தலும் நடைபெறலாம் எனவும் அவர் தெரிவித்தார்.
இண்டி கூட்டணியில் இடம்பெற்றுள்ள திரிணமுல் காங்கிரஸ், ஆம்ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் தங்களது மாநிலங்களில் தனித்துப் போட்டியிடப்போவதாக அறிவித்துள்ள நிலையில் தற்போது மேலும் ஒரு கட்சி தனித்துப் போட்டியிடும் என அறிவித்துள்ளது இண்டி கூட்டணியில் மேலும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதனிடையே முன்னாள் அமைச்சரும், தேசியவாத மாநாட்டுக் கட்சி மூத்த தலைவருமான முஷ்டாக் புகாரி இன்று பாஜகவில் இணைந்தார்.