டெல்லியில் பாஜக தேசிய செயற்குழு கூட்டம் தொடங்கியது.
2024 மக்களவை தேர்தல் அடுத்த சில மாதங்களில் நடைபெறவுள்ளது. இதனையடுத்து கூட்டணி, தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை உள்ளிட்ட பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் பாஜக தேசிய செயற்குழு கூட்டம் டெல்லியில் இன்று தொடங்கியது.
பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா தலைமையில் இரு நாட்கள் நடைபெறும் செயற்குழு கூட்டத்தை பிரதமர் நரேதந்திர மோடி குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார்.
இந்த கூட்டத்தில் அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத்சிங் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோரும் செயற்குழு கூட்டத்தில் கலந்துகொண்டுள்ளனர். நாடு முழுவதிலும் இருந்து 11,500க்கும் மேற்பட்ட செயற்குழு நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.
தற்போதைய அரசியல் சூழல், மக்களவை தேர்தல் வியூகம், கூட்டணி பேச்சுவார்ததை உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து செயற்குழுவில் விவாதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் பல்வேறு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்படுகிறது.