ஆந்திரப் பிரதேசத்தின் தென்கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள ஒரு வைணவத் தலமே திருப்பதி. இந்தியாவில் உள்ள மிக முக்கியத் திருத்தலங்களில் இதுவும் ஒன்று. இத்தலம் வைணவர்களின் 108 திவ்விய தேசங்கள் என்றழைக்கப்படும் கோவில்களில் திருவரங்கத்திற்கு அடுத்தபடியாக இரண்டாம் இடத்தில் வைத்துக் கொண்டாடப்படுகிறது. இங்கு, வெங்கடாஜலபதி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.
திருப்பதிக்கு பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் தினமும் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்கின்றனர். ஆன்லைன் மூலமாக டிக்கட் பதிவு செய்து சுவாமி தரிசனம் செய்யப்படுகிறது.
அந்த வகையில், ஆன்லைன் டிக்கட் குறித்த விவரங்களைத் திருமலை திருப்பதி தேவஸ்தானம் வெளிட்டுள்ளது. நாளை அதாவது, 19-ம் தேதி காலை 10 மணிக்கு, மே மாதத்திற்கான நிதிச் சேவை டிக்கெட்டுகளின் ஒதுக்கீட்டை திருமலை திருப்பதி தேவஸ்தானம் ஆன்லைனில் வெளியிடுகிறது.
அதேபோல, 22 -ம் தேதி அன்று மெய்நிகர் சேவை டிக்கெட் வெளியிடுகிறது. 23 -ம் தேதி காலை 10 மணிக்கு அங்கபிரதக்ஷணம் டோக்கன்கள் வெளியிடப்படுகின்றன. அன்றைய தினம் காலை 11 மணிக்கு ஸ்ரீவாணி டிக்கெட் மே கோட்டாவை வெளியிடுகிறது. எனவே, திருப்பதி செல்ல விரும்புவர்கள் இந்த நல்வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம்.