பிரபல நடிகர் அஜித் குமாருடன் துணிவு படத்தில் நடித்து புகழ் பெற்ற ரித்துராஜ் சிங், மாரடைப்புக் காரணமாக காலமானார். அவருக்கு வயது 59.
நடிகர் அஜித் குமார் நடித்த படம் துணிவு. இந்த படத்தை இயக்குநர் வினோத் இயக்கியுள்ளார். இந்த படத்தில், சுனில் தத்தா என்ற வேடத்தில் நடித்தவர் ரித்துராஜ் சிங்.
மேலும், இந்தி நடிகர் வருண் தவான் நடிப்பில் வெளியான பத்ரிநாத் கி துல்ஹனியா திரைப்படத்தில் ஹீரோவின் அப்பாவாக நடித்து அசத்தி இருப்பார். அதேபோல, ஜான் ஆபிரகாமின் சத்யமேவ ஜயதே மற்றும் யாரியான் 2 உள்ளிட்ட பாலிவுட் படங்களிலும் நடித்துள்ளார்.
கடந்த சில நாட்களாக, கணைய அலர்ஜி நோயால் அவதிப்பட்டு வந்தார் ரித்துராஜ் சிங். இதற்காக, பிரபல மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்த நிலையில், திடீர் மாரடைப்பு காரணமாக, ரித்துராஜ் சிங் இன்று காலமானார். அவரது மறைவுக்குத் தமிழ் மற்றும் இந்தி திரையுலகத்தினர் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.