மாநிலங்களவை எம்.பி-யாக எல்.முருகன் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
15 மாநிலங்களை சேர்ந்த 56 மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் ஏப்ரல் 2ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இதில் மத்திய பிரதேசத்தில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்பட்ட அமைச்சர் எல்.முருகனின் பதவிக்காலமும் நிறைவு பெறுகிறது.
இது தொடர்பாக, கடந்த சில நாட்களுக்கு முன்னர், பா.ஜ.க தேசிய தலைமை ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டது. அதில், மாநிலங்களவை வேட்பாளராக மத்திய பிரதேசத்தில் இருந்து எல். முருகன், உமேஷ் நாத் மஹாராஜ், மாயா நரோலியா மற்றும் பன்சிலால் குர்ஜார் ஆகியோர் பெயர் போட்டியிடுவார்கள் என அறிவித்து இருந்தது. அதன்படி மத்திய மாநிலத்தில் அவர் வேட்பு மனு தாக்கல் செய்தார்.
இந்த நிலையில், மத்திய பிரதேசத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராக எல்.முருகன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.