பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா குஜராத் மாநிலத்தில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
15 மாநிலங்களைச் சேர்ந்த 56 மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிகாலம் சமீபத்தில் நிறைவடைந்தது. இதையடுத்து காலியாக உள்ள மாநிலங்களவை உறுப்பினர்களின் இடத்திற்கான தேர்தல் வரும் 27ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 15-ந்தேதி நிறைவடைந்தது.
இந்நிலையில், குஜராத் மாநிலத்தில் காலியாக உள்ள 4 இடங்களுக்கு பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா உள்ளிட்ட 4 பேர் தங்கள் வேட்புமனுக்களை தாக்கல் செய்திருந்தனர். ஜே.பி.நட்டா உள்ளிட்ட 4 பா.ஜ.க. வேட்பாளர்களும் மாநிலங்களவைக்கு போட்டியின்றி தேர்வாகியுள்ளனர்.
இதேபோல் ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து மாநிலங்களவைக்கு சோனியா காந்தி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஏற்கனவே மக்களவைக்கு 5 முறை தேர்ந்தெடுக்கப்பட்ட சோனியா முதல்முறையாக மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.