நாலந்தா பல்கலைக்கழக மாணவர்கள் குழு புதுதில்லியில் உள்ள நாடாளுமன்ற வளாகத்தில் குடியரசுத் துணைத் தலைவர் ஜக்தீப் தன்கரை இன்று (21-02-2024) சந்தித்தது.
புதுதில்லியில் நாலந்தா பல்கலைக்கழகத்தின் மூன்று பேராசிரியர்களான டாக்டர் பி.சி.அம்பிகா பிரசாத் பானி, டாக்டர் பூஜா தப்ரல் மற்றும் டாக்டர் டோசபந்தா பதான் ஆகியோர் உடன் 23 மாணவர்கள் கொண்ட தூதுக்குழு, குடியரசுத் துணைத் தலைவரை இன்று சந்தித்தது.
இந்தக் குழுவில் இந்தியா, பூட்டான், வியட்நாம், பங்களாதேஷ், இந்தோனேசியா, மியான்மர், லாவோஸ், நேபாளம், அர்ஜென்டினா, கென்யா, தாய்லாந்து மற்றும் உகாண்டா ஆகிய நாடுகளின் மாணவர்கள் இடம்பெற்றிருந்தனர்.
மாணவர்களுடனான கலந்துரையாடலின் போது, பேசிய குடியரசுத் துணைத் தலைவர்,
2023 செப்டம்பர் 29 அன்று பீகாரின் நாலந்தா பல்கலைக்கழகத்திற்கு தாம் மேற்கொண்ட பயணத்தை நினைவு கூர்ந்தார். அமைதி, முன்னேற்றம் மற்றும் நிலையான வளர்ச்சியின் தூதுவர்களாக மாணவர்கள் திகழ வேண்டும் எனத் தெரிவித்தார்.
நாலந்தா பல்கலைக்கழகத்தின் பாரம்பரியத்தை மேலும் அதிக உயரங்களுக்கு எடுத்துச் செல்ல மாணவர்களை அவர் ஊக்குவித்தார்.