மிலன் 2024 கடற்படைப் பயிற்சி: பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்பு!
Mar 15, 2026, 03:30 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மிலன் 2024 கடற்படைப் பயிற்சி: பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்பு!

Murugesan M by Murugesan M
Feb 22, 2024, 12:17 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் முக்கியமான பாதுகாப்பு ஒத்துழைப்பு நாடாகவும், இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் அமைதி, ஸ்திரத்தன்மை  மற்றும் செழிப்புக்கு பங்காற்றும் நாடாகவும் இந்தியா தொடர்ந்து உறுதியுடன் செயலாற்றும் என்று மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

இந்திய கடற்படையின் சார்பில், ‘மிலன் 2024’ ( MILAN 2024) எனப்படும் 12-வது கடற்படை கூட்டுப்பயிற்சியின் தொடக்க விழா ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினத்தில் நடைபெற்றது. இதில், கடற்படைத் தளபதி அட்மிரல் ஹரிகுமார் மற்றும் 50-க்கும் மேற்பட்ட நட்பு நாடுகளைச் சேர்ந்த அமைச்சர்கள், தூதர்கள், கடற்படைத் தளபதிகள் மற்றும் கடல்சார் படைகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

இதில் அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா, பிரான்ஸ், பங்களாதேஷ், தென்கொரியா, வியட்நாம், இந்தோனேசியா, மலேசியா உட்பட 50 நாடுகளின் கடற்படைகள் கலந்து கொள்கின்றன.

நிகழ்ச்சியில் பேசிய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், போர்கள் மற்றும் மோதல்கள் இல்லாதது மட்டுமே அமைதி என்று கூறிவிட முடியாது. பகிரங்கமாக மோதிக்கொள்ளாமல், மற்றவர்களை பலவீனப்படுத்த தங்களால் முடிந்த அனைத்தையும் செய்வது மறைமுக மற்றும் எதிர்மறை அமைதி ஆகும்.

இதைத்தாண்டி நேர்மறையான அமைதி தான் முக்கியம். இது பாதுகாப்பு, நீதி மற்றும் ஒத்துழைப்பு போன்ற பரந்த அம்சங்களை உள்ளடக்கியது. நேர்மறையான அமைதி என்பது அனைவரின் ஒத்துழைப்புடன், பகிரப்பட்ட அமைதியாகும். இந்த உணர்வை பிரதமர் நரேந்திர மோடி மிகத் தெளிவாக எடுத்துரைத்திருக்கிறார்.

ஆயுதப் படைகள் போர்களை நடத்துவதோடு மட்டுமல்லாமல், அமைதியைப்  பராமரிப்பதிலும் பங்காற்றுகிறது. பேரிடர்களின் போது பல்வேறு மனிதாபிமான உதவிகளை ஆயுதப்படைகள் வழங்குகிறது. அமைதி மற்றும் பகிரப்பட்ட நன்மைக்காக போராடும் அதே வேளையில், கூட்டு நல்வாழ்வு, கடற்கொள்ளைத் தடுப்பு மற்றும் கடத்தல் தடுப்பு போன்ற எந்தவொரு அச்சுறுத்தலையும் எதிர்கொள்வதில் இருந்து கடற்படை பின்வாங்காது.

இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் முக்கியமான பாதுகாப்பு ஒத்துழைப்பு நாடாகவும், இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் அமைதி, ஸ்திரத்தன்மை மற்றும் செழிப்புக்கு பங்காற்றும் நாடாகவும் இந்தியா தொடர்ந்து உறுதியுடன் செயலாற்றும் என்று கூறினார்.

Tags: Rajnath Singhdefence ministerVisakhapatnamMILAN
ShareTweetSendShare
Previous Post

இண்டி கூட்டடணி என்பது ஊழல் கூட்டணி : ஜே.பி. நட்டா குற்றச்சாட்டு!

Next Post

2023-ல் IIT மெட்ராஸ் 300 காப்புரிமைகளை பெற்று சாதனை!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies