2023-ல் IIT மெட்ராஸ் 300 காப்புரிமைகளை பெற்று சாதனை!
Sep 13, 2026, 10:27 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

2023-ல் IIT மெட்ராஸ் 300 காப்புரிமைகளை பெற்று சாதனை!

Murugesan M by Murugesan M
Feb 22, 2024, 12:20 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகம் (IIT மெட்ராஸ்), 2023-ஆம் ஆண்டில் பெறப்பட்ட காப்புரிமைகளின் எண்ணிக்கையை இருமடங்காக்கி சாதனை படைத்துள்ளது. 2022-ல் 156 காப்புரிமைகள் பெறப்பட்ட நிலையில், 2023-ல் இந்த எண்ணிக்கை 300 என்ற அளவுக்கு அதிகரித்துள்ளது.

மேலும், முந்தைய ஆண்டில் 58 சர்வதேச காப்புரிமைகள் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், 2023-ல் குறிப்பிடத்தக்க அளவுக்கு அதிகரித்து 105-ஐ எட்டியுள்ளது.

நடப்பு நிதியாண்டில் (டிசம்பர் 2023 நிலவரப்படி) 163 இந்தியக் காப்புரிமை, 63 சர்வதேசக் காப்புரிமை விண்ணப்பங்கள் உட்பட 221 காப்புரிமைகள் ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்டிருக்கின்றன.

இக்கல்வி நிறுவனம் தொடங்கப்பட்டதில் இருந்து தற்போதுவரை இந்தியாவிலும் (1,800), வெளிநாடுகளிலும் (750) மொத்தம் 2,550 அறிவுசார் சொத்து (ஐபி) விண்ணப்பங்கள் (காப்புரிமை உள்பட) தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

ஐஐடி மெட்ராஸ் 1975-ஆம் ஆண்டு ஜனவரியில் காப்புரிமை விண்ணப்பங்களைத் தாக்கல் செய்யத் தொடங்கியது. மொத்த ஐபி விண்ணப்பங்களின் எண்ணிக்கை 2016-ல் ஆயிரத்தையும், 2022-ல் 2 ஆயிரத்தையும், 2023-ல் 2 ஆயிரத்து 500-ஐயும் கடந்துள்ளது.

இதுகுறித்து IIT மெட்ராஸ் இயக்குநர் பேராசிரியர் வி.காமகோடி கூறியதாவது, “நாம் சுதந்திரத்தின் 100-வது ஆண்டை நோக்கிப் பயணிக்கும்போது பாரதம் வல்லரசு நாடாக உருவெடுக்க நமது கருத்துக்களைப் பாதுகாக்க வேண்டியது அவசியமாகிறது.

அதிக எண்ணிக்கையிலான காப்புரிமைகளைத் தாக்கல் செய்து சாதனை படைக்கும் வகையில் விரிவான திட்டத்தைத் தொகுத்தளித்த தொழில்துறை ஆலோசனை மற்றும் நிதியுதவி ஆராய்ச்சி அலுவலகத்தைச் சேர்ந்த ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு எனது பாராட்டுகள்” எனக் குறிப்பிட்டார்.

அறிவுசார் சொத்து மற்றும் தொழில்நுட்பப் பரிமாற்றம் தொடர்பான பல்வேறு அம்சங்களை ஒருங்கிணைக்கும் பணியை ஐஐடி மெட்ராஸ்-ல் உள்ள தொழில்துறை ஆலோசனை மற்றும் நிதியுதவி ஆராய்ச்சி அலுவலகம் மேற்கொண்டு வருகிறது. ஆசிரியர்கள்,  ஆராய்ச்சியாளர்கள், மாணவர்களுடன் இணைந்து செயல்பட்டு வரும் இந்த மையத்தில் பிரத்யேக சட்டப்பிரிவு ஒன்றும் இயங்கி வருகிறது.

Tags: IIT Madraspatents grantedInstitute of Technology Madras
Share
Tweet
SendShare
Previous Post

மிலன் 2024 கடற்படைப் பயிற்சி: பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்பு!

Next Post

அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 7-வது முறையாக அமலாக்கத்துறை சம்மன்! – பிப்.26-ல் ஆஜரா? கைதா?

Related News

கோலாகலமாக நடைபெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் தேரோட்டம்; ஏராளமானோர் பங்கேற்பு

மதுராந்தகம் உள்ளிட்ட 3 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிப்பு; சீமான் அதிரடி

உணவிலும், காங்கிரஸ் கட்சி அரசியல் செய்து வருகிறது; கிரண் ரிஜிஜூ கண்டனம்

விநாயகர் சதுர்த்தி விழா – கோயம்பேடு சந்தையில் களைகட்டிய விற்பனை!

சர்வதேச விவகாரங்களில் செல்வாக்கு செலுத்தும் BRICS, G20 மற்றும் SAARC : வேறுபாடுகள் என்ன? – சிறப்பு தொகுப்பு!

மாற்றி அமைக்கப்படும் சர்வதேச ஒழுங்கு : பிரிக்ஸ் மாநாடு மூலம் இந்தியா மேற்கொண்ட ராஜதந்திர நகர்வு என்ன? – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

லண்டன் பயணம் குறித்து முதல்வர் விஜய் விளக்கம் அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

செயற்கை நுண்ணறிவை (AI) ஆயுதமாக பயன்படுத்தக்கூடாது – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு!

திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம் – திருக்குடைகள் நன்கொடை!

ஹிந்து மத துறவியின் பாதங்களை தொட்டு ஆசி பெற்ற ஈரான் அதிபர் – வீடியோ வைரல்!

டாலருக்கு மாற்றாக பிரிக்ஸ் கரன்சி? : இந்தியா கொண்டு வரும் புதிய நாணயப் புரட்சி – சிறப்பு தொகுப்பு!

சுத்திகரிக்கப்படாமல் காவிரியில் கலக்கும் பெங்களூரு கழிவு நீர் – அமைச்சர் ராமலிங்க ரெட்டி

பிரிக்ஸ் மாநாட்டில் ராமேஸ்வரம் கோயிலின் பிரகாரத்தை திரையில் முன்னிறுத்திய பிரதமர் – நயினார் நாகேந்திரன் நன்றி!

தனியார் BOOKING APPS களின் dummy chart முறைகேடு – ஆம்னி பேருந்துகளின் புதிய கொள்ளை!

திருச்சியில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க வேண்டும் – மதிமுக எம்.பி துரை வைகோ வலியுறுத்தல்!

தமிழக காவல் துறையில் 29,108 புதிய பணியிடங்கள் – முதலமைச்சர் விஜய் ஒப்புதல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies