டெல்லியில் சர்வதேச ஜவுளி கண்காட்சியை பிரதமர் மோடி வரும் 26ஆம் தேதி தொடங்கி வைக்கிறார்.
இதுதொடர்பாக ஜவுளி அமைச்சக செயலாளர், ரச்னா ஷா செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது,உலக அரங்கில் இந்தியாவின் ஜவுளி துறை வலிமையை வெளிப்படுத்த இந்த கண்காட்சி ஒரு தனித்துவமான வாய்ப்பாக இருக்கும் என தெரிவித்தார்.
டெல்லியில் உள்ள பாரத் மண்டபம் மற்றும் யஷோபூமியில் சுமார் 22 லட்சம் சதுர அடி பரப்பளவில் 4 நாட்கள் இந்த கண்காட்சி நடைபெறும் என்றும் அவர் கூறினார். 11 ஜவுளி ஏற்றுமதி ஊக்குவிப்பு கவுன்சில்களின் கூட்டமைப்பு, மற்றும் ஜவுளி அமைச்சகத்தின் ஆதரவுடன் நடைபெறும் கண்காட்சியில் 100 நாடுகளை சேர்ந்த ஏற்றுமதியாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்பார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.
இந்த நிகழ்வின் போது சர்வதேச கூட்டாண்மை உட்பட 46 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் (எம்ஓயுக்கள்) கையெழுத்தாகும என ரச்னா ஷா கூறினார்.