உயர்தர சிகிச்சை அனைத்து நிலை மக்களுக்கும் கொண்டு செல்ல மத்திய அரசு பணியாற்றி வருகிறது! - மன்சுக் மாண்டவியா
Sep 1, 2025, 01:51 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

உயர்தர சிகிச்சை அனைத்து நிலை மக்களுக்கும் கொண்டு செல்ல மத்திய அரசு பணியாற்றி வருகிறது! – மன்சுக் மாண்டவியா

Web Desk by Web Desk
Feb 23, 2024, 05:44 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கதிர்வீச்சு புற்றுநோயியல், 128 ஸ்லைஸ் சி.டி ஸ்கேனர் மற்றும் திரவ மருத்துவ ஆக்ஸிஜன் (எல்எம்ஓ) ஆலை உள்ளிட்ட புதிய சுகாதார வசதிகளை இமாச்சலப் பிரதேச மாநிலம் பிலாஸ்பூரில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சர்  அனுராக் தாக்கூர் மற்றும் மாநிலங்களவை உறுப்பினர் திரு ஜகத் பிரகாஷ் நட்டா ஆகியோர் இன்று தொடங்கி வைத்தனர். பிலாஸ்பூர் எய்ம்ஸ் மருத்துவமனையில் விஷ்ரம் சதன் என்ற இரவு தங்குமிடம் அமைப்பதற்கும் அடிக்கல் நாட்டப்பட்டது.

நிகழ்ச்சியில் தலைமை விருந்தினராகப் பங்கேற்று உரையாற்றிய மாநுலங்களவை உறுப்பினர் ஜே பி நட்டா,

எய்ம்ஸ் மருத்துவமனைகளை அதிகரித்தல், மருத்துவக் கல்லூரிகளை இரட்டிப்பாக்குதல், எம்பிபிஎஸ் மற்றும் முதுநிலை இடங்களை அதிகரித்தல் போன்ற  நடவடிக்கைகளில் மத்திய அரசு முனைப்புடன் பணியாற்றி வருகிறது என்றார்.

உலகின் மிகப்பெரிய சுகாதாரப் பாதுகாப்புத் திட்டமான ஆயுஷ்மான் பாரத் தொடங்கப்பட்டதன் காரணமாக, இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள தகுதிவாய்ந்த அனைத்து மக்களும் தற்போது முழுமையாகக் காப்பீடு பெற்றுள்ளனர் என்று தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் பேசிய மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா,

பிலாஸ்பூரில் சுகாதாரத் துறை தொடர்பான 12 புதிய திட்டங்கள் இன்று தொடங்கப்பட்டுள்ளன  என்று கூறினார். இந்த மத்திய அரசு சவால்களை வாய்ப்புகளாக மாற்றியுள்ளது என்று அவர் தெரிவித்தார்.  கடந்த 10 ஆண்டுகளில் சுகாதார உள்கட்டமைப்புகள் பெரிதும் மேம்படுத்தப்பட்டுள்ளன என்று அவர் கூறினார்.  சுகாதார அவசர நிலைகளைக் கையாள அரசு தயார் நிலையில் உள்ளது என்றும் தெரிவித்தார்.

உயர்தர சுகாதார சேவைகளை அனைத்து நிலை மக்களுக்கும் கொண்டு செல்ல மத்திய அரசு பணியாற்றி வருவதாகவும், அந்த முயற்சியைத் தொடரும் வகையில், நாடு முழுவதும் பல புதிய மருத்துவக் கல்லூரிகள், செவிலியர் கல்லூரிகள் மற்றும் எய்ம்ஸ் மருத்துவமனைகள் திறக்கப்பட்டுள்ளன என்றும்  கூறினார்.

நிகழ்ச்சியில் பேசிய தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சர் அனுராக் தாக்கூர், தரமான சுகாதார உள்கட்டமைப்பை கடைசி மைல் வரை கொண்டு செல்லும் மத்திய அரசின் முயற்சியில் இன்றைய திட்டங்களின் தொடக்கம் மற்றொரு மைல்கல் என்று கூறினார்.

இன்று தொடங்கப்பட்டுள்ள இரவு நேர தங்குமிட கட்டுமானப் பணிகள் நிறைவடைந்தபின் இதன் மூலம், தொலைதூரப் பகுதிகளிலிருந்து வரும் மக்கள் பயன் பெறுவார்கள் என்று தெரிவித்தார்.

 

Tags: jp naddaMinister Anurag Thakurbjp nadda
ShareTweetSendShare
Previous Post

இந்தியா – இங்கிலாந்து டெஸ்ட் : முதல் நாள் முடிவு!

Next Post

அரசு பேருந்தில் திடீர் தீ விபத்து – உயிர் தப்பிய 44 பயணிகள்!

Related News

மோடியின் ராஜதந்திரம் : இந்தியாவில் ரூ.6 லட்சம் கோடி முதலீடு செய்யும் ஜப்பான்!

அக்டோபர் 7ஆம் தேதி ஹமாஸ் நடத்திய தாக்குதல் காட்சி – வெளியியிட்டார் இஸ்ரேல் பிரதமர்!

2038-ல் 2-வது பெரிய பொருளாதாரம் : அமெரிக்காவை பின்னுக்கு தள்ளி முன்னேறும் இந்தியா!

சத்ய சாய் பாபா நூற்றாண்டு விழா : குமரி – புட்டபர்த்தி தொடர் ஓட்டம் தொடக்கம்!

மும்பையில் விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலம் – லால்பக்சா ராஜா விநாயகரை தரிசனம் செய்தார் ஜே.பி.நட்டா!

ஆபரேசன் சிந்தூர் நடவடிக்கையில் 50-க்கும் குறைவான ஆயுதங்கள் மட்டுமே பயன்படுத்தப்பட்டது – ஏர் மார்ஷல் நர்மதேஷ்வர் திவாரி

Load More

அண்மைச் செய்திகள்

சேலம் மாவட்டத்தில் களைகட்டிய விநாயகர் ஊர்வலம் – 2000க்கும் மேற்பட்ட சிலைகள் கரைப்பு!

சென்னையில் கோலாகலமாக நடைபெற்ற விநாயகர் ஊர்வலம் – நீர்நிலைகளில் கரைக்கப்பட்ட சிலைகள்!

தமிழ்நாட்டின் பொறுப்பு டிஜிபியாக பதவியேற்பு – வெங்கட்ராமன் கடந்து வந்த பாதை!

தமிழக சட்டம்-ஒழுங்கு பொறுப்பு டிஜிபியாக வெங்கட்ராமன் பொறுப்பேற்பு!

தற்சார்பு பாரதம் உருவாக சுதேசி பொருட்களுக்கு முன்னுரிமை அளிப்போம் – நயினார் நாகேந்திரன்

தமிழக பொறுப்பு டிஜிபி நியமனம் – அண்ணாமலை கண்டனம்!

குற்றாலத்தில் சீரான நீர்வரத்து – சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி!

பிரிக்ஸ் அமைப்பை வலுப்படுத்த சீனாவுடன் இணைந்து செயல்படுவோம் : ரஷ்ய அதிபர் புதின் உறுதி!

தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றவில்லை – தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி குற்றச்சாட்டு!

நாகை மீன்பிடி துறைமுகத்தில் மீன்களின் விலை உயர்வு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies