பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு பயங்கரவாதத்தை அடக்கியுள்ளது! - அமித் ஷா பெருமிதம்
Jan 16, 2026, 06:44 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு பயங்கரவாதத்தை அடக்கியுள்ளது! – அமித் ஷா பெருமிதம்

Murugesan M by Murugesan M
Feb 24, 2024, 10:12 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கடந்த 10 ஆண்டுகளில் தீவிரவாதம் தொடர்பான வன்முறைகளும் உயிரிழப்பும் பெருமளவு குறைந்துள்ளன என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு பயங்கரவாதத்தை ஒடுக்க சிறந்த உத்திகளைப் பின்பற்றி வருவதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

போதுமான சுகாதாரம் மற்றும் கல்வி உள்கட்டமைப்புகளை உருவாக்குவதன் மூலம் நக்சல் பாதித்த பகுதிகளில் வசிக்கும் ஏழைகளின் இதயங்களை மோடி அரசு வென்றுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்கு கொள்கைகள் காரணமாக, இடதுசாரி தீவிரவாதம் அதன் பலத்தை இழந்துவிட்டது என்று அவர் கூறியுள்ளார். நக்சலிசத்தால் பாதிக்கப்பட்ட பிராந்தியங்களில் வளர்ச்சி மற்றும் பாதுகாப்புக்கான முழுமையான அணுகுமுறையுடன் பிரதமர் நரேந்திர மோடியின் அரசு செயல்படுவதாக அவர் தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடியின் அரசு மக்களின் நம்பிக்கையை வென்றுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.

The Modi govt has won the hearts of the poor living in the Naxalism-affected areas by building adequate healthcare and education infrastructure.

On account of PM @narendramodi Ji's visionary policies, left-wing extremism has today lost its breeding ground. #NaxalFreeBharat pic.twitter.com/XuzyO5ZsDN

— Amit Shah (@AmitShah) February 23, 2024

உள்துறை அமைச்சகத்தின் தரவுகளின்படி, 2014-ம் ஆண்டுக்கு முந்தைய பத்து ஆண்டுகளை ஒப்பிடுகையில் கடந்த பத்தாண்டுகளில் இடதுசாரி தீவிரவாதம் தொடர்பான வன்முறைகள் 52 சதவீதமும், இறப்பு எண்ணிக்கை 69 சதவீதமும் குறைந்துள்ளது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இடதுசாரி தீவிரவாத சம்பவங்கள் 2004-2014-ம் ஆண்டு காலகட்டத்தில் 14,862 ஆக இருந்தது என்றும் 2014-ம் ஆண்டுக்கு பிந்தைய பத்து ஆண்டுகளில் அது 7,128 ஆக குறைந்துள்ளது.

இடதுசாரி தீவிரவாதத்தால் பாதுகாப்புப் படையினரின் இறப்பு எண்ணிக்கை 2004-14 ஆம் ஆண்டு காலகட்டத்தில் 1,750 ஆக இருந்தது என்றும் இது 2014-2023-ஆம் ஆண்டு காலகட்டத்தில் 485 ஆக 72 சதவீதம் குறைந்துள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேபோல், வன்முறை நடந்த மாவட்டங்களின் எண்ணிக்கை 2010-ல் 96 ஆக இருந்தது எனவும் இது 2022-ல் 53 சதவீதம் குறைந்து 45 ஆக குறைந்துள்ளது என்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா தனது எக்ஸ் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Tags: PM ModiAmith sha
ShareTweetSendShare
Previous Post

டெல்லியில் சர்வதேச ஜவுளி கண்காட்சி : பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்!

Next Post

அவதூறு வழக்கு : ராகுல் காந்தி, சித்தராமையா, டி.கே. சிவகுமார் நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு!

Related News

30 ஆண்டுகால உத்தவ்தாக்கரே கோட்டை சரிந்தது – பாஜக வசமான மும்பை மாநகராட்சி!

வாசுதேவநல்லூர் பகுதியில் மாட்டுப்பொங்கலை ஒட்டி நடைபெற்ற பசு ஓட்டம்!

வெள்ளை புடவை அணிந்து பெண்கள் பொங்கல் வைத்து வழிபாடு!

கட்சி அலுவலகத்தில் அதிமுக நிர்வாகி விபரீத முடிவு!

டாப்சிலிப் வனப்பகுதியில் யானைப் பொங்கல் திருவிழா!

தஞ்சை பெரிய கோயிலில் மாட்டு பொங்கலையொட்டி நந்தியம் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம்!

Load More

அண்மைச் செய்திகள்

குற்றாலத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள், ஐயப்ப பக்தர்கள்!

தேசிய கீதத்திற்கு பிறகு தமிழ்தாய் வாழ்த்து பாட சொன்ன குடியரசு துணை தலைவர் CPR!

எக்ஸ் தளத்தில் உள்ள ஏஐ கருவியான குரோக்க்கு அந்நிறுவனம் முக்கிய கட்டுப்பாடு!

திருச்சியில் வெகு விமர்சையாக நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டி!

நெல்லையில் மாட்டுப் பொங்கல் கோலாகலம் – கால்நடைகளுக்கு நன்றி செலுத்திய விவசாயிகள்!

தோட்டத்து வீட்டில் மாட்டு பொங்கலை கொண்டாடிய பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா !

நந்தி பகவானுக்கும், சூரியனுக்கும் காட்சி கொடுத்த அண்ணாமலையார்!

கொல்லிமலையில் பொங்கல் கொண்டாட்டம்!

பாலமேடு ஜல்லிக்கட்டில் சேட்டை செய்த TVK நபர்கள் அறிவுறுத்தி அனுப்பி விழா கமிட்டி!

2026ல் தமிழகத்தில் தூய்மையான, நேர்மையான வளர்ச்சிமிக்க கூட்டணி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies