தாய்லாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பீகார் ஆளுநர் ஸ்ரீ ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் பண்டைய நகரமான அயுத்யாவை பார்வையிட்டார்.
பீகார் மாநில ஆளுநர் ஸ்ரீ ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் தாய்லாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.தாய்லாந்தில் 26 நாட்கள் கண்காட்சிக்காக புத்தரின் புனித நினைவுச்சின்னங்களை எடுத்துச் சென்ற 22 பேர் கொண்ட இந்தியக் குழுவிற்கு ஆளுநர் தலைமை தாங்கி சென்றுள்ளார்.
1350 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட வரலாற்று நகரமான அயுத்தாயா, சியாமிய இராச்சியத்தின் இரண்டாவது தலைநகரமாக இருந்தது. 1767 ஆம் ஆண்டில் பர்மிய இராணுவத்தால் நகரம் தாக்கப்பட்டு இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டது. அவர்கள் நகரத்தை எரித்தனர் மற்றும் குடிமக்களை நகரத்தை விட்டு வெளியேறும்படி கட்டாயப்படுத்தினர்.
ஒரு காலத்தில் உலகளாவிய இராஜதந்திரம் மற்றும் வர்த்தகத்தின் முக்கிய மையமாக விளங்கிய அயுதயா, தற்போது தொல்பொருள் பொக்கிஷங்களின் தாயகமாக உள்ளது, உயரமான (பிராங்) புதையல் கோபுரங்கள் மற்றும் நினைவுச்சின்னங்கள், புத்த மடாலயங்கள் ஆகியவை உள்ளன.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய பீகார் ஆளுநர் ஸ்ரீ அர்லேகர், இந்தியா. தாய்லாந்துக்கு இடையேயான கலாச்சார மற்றும் வரலாற்று தொடர்பை இந்த நகரம் சித்தரிக்கிறது. பல பௌத்த மரபுகள் மற்றும் புத்த கயாவின் தாயகமாக விளங்கும் பீகார் மாநிலத்தின் ஆளுநராக இருப்பதால், வரலாற்றுச் சிறப்புமிக்க அயுதயா நகருக்கு, ராமர் கோவில் விழா நடைபெற்ற நேரத்தில் வந்துள்ளதாக தெரிவித்தார்.
இந்த பழங்கால கோவில்கள், அரண்மனைகள் மற்றும் இடிபாடுகள் தாய்லாந்தின் வளமான வரலாறு மற்றும் கலாச்சாரத்தை ஆழமாக புரிந்துகொள்வது மட்டுமல்லாமல், நவீன தாய்லாந்தின் கலாச்சார வேர்கள் மற்றும் பாரம்பரியத்தின் ஆழத்தை புரிந்து கொள்ள உதவுகிறது என்று ஆளுநர் கூறினார்.