தமிழகத்தில் ஒரே கட்ட தேர்தலுக்கு பரிசீலனை, புகார் தெரிவிக்க சி-விஜில் செயலி! - தலைமைத் தேர்தல் ஆணையர்
Aug 19, 2026, 04:12 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தமிழகத்தில் ஒரே கட்ட தேர்தலுக்கு பரிசீலனை, புகார் தெரிவிக்க சி-விஜில் செயலி! – தலைமைத் தேர்தல் ஆணையர்

Murugesan M by Murugesan M
Feb 24, 2024, 05:22 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

தேர்தல் தொடர்பான புகார்களை மக்கள் தெரிவிக்க ‘சி-விஜில்’ (CVigil) என்ற செயலி உருவாக்கப்பட்டுள்ளதாகவும், புகார் தெரிவித்த 100 நிமிடங்களில் அதற்குரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தெரிவித்தார்.

தமிழகத்தில் மக்களவை தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வு செய்ய, இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தலைமையில், தேர்தல் ஆணையர் அருண் கோயல், மூத்த துணை தேர்தல் ஆணையர்கள் தர்மேந்திர சர்மா, நிதேஷ் வியாஸ், துணை தேர்தல் ஆணையர்கள் அஜய்பதூ, மனோஜ்குமார் சாஹு, ஊடகப்பிரிவு தலைமை இயக்குநர் பி.நாராயணன், தலைமை இணை இயக்குநர் அனுஜ் சந்தக், முதன்மை செயலர் மல்லே மாலிக் ஆகியோர் நேற்று முன்தினம் இரவு சென்னை வந்தனர்.

தமிழகத்தில் மக்களவை தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து நேற்று மீனம்பாக்கத்தில் உள்ள தனியார் ஓட்டலில்  இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தலைமையில், நடந்த ஆலோசனை கூட்டத்தில், தமிழகத்தில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட தேசிய, மாநிலகட்சிகளின் பிரதிநிதிகளை அவர்கள்சந்தித்து, மக்களவை தேர்தலை தமிழகத்தில் ஒரே கட்டமாக நடத்த வேண்டும் என்று பெரும்பாலும் அனைத்து கட்சிகளின் பிரதிநிதிகளும் வலியுறுத்தினர்.

பிற்பகலில், தேர்தல் ஏற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர்கள், காவல் கண்காணிப்பாளர்களிடம் கேட்டறிந்தனர். பல்வேறு அறிவுறுத்தல்களையும் வழங்கினர். தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு மற்றும் கூடுதல் ஆணையர்கள், இணை ஆணையர் உடன் இருந்தனர்.

கடந்த 2 நாட்களாக ஆலோசனை நடத்திய நிலையில் இன்று (பிப்.24) அவர்கள் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது பேசிய இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார்,

“கடந்த 2 நாட்களாக தமிழகத்தில் தேசிய, மாநிலக் கட்சிகள், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியுள்ளோம். மக்களவைத் தேர்தலை ஒரே கட்டமாக நடத்த வேண்டும் என்ற கோரிக்கை பரவலாக பல கட்சிகளாலும் முன்வைக்கப்பட்டது. அதேபோல் தேர்தலில் பணப் பட்டுவாடாவை தடுக்க வேண்டும், மது விநியோகத்தைத் தடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.

தேர்தலை நியாயமாக, சுதந்திரமாக நடத்த வேண்டும் என்பதில் தேர்தல் ஆணையம் உறுதியாக இருக்கிறது. தேர்தல் தொடர்பாக புகார்களை மக்கள் ஆணையத்திடம் தெரிவிக்கும் வண்ணம் சி-விஜில் செயலி உருவாக்கப்பட்டுள்ளது.

இதில் மக்கள் அளிக்கும் புகார்களுக்கு 100 நிமிடங்களுக்குள் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். தமிழகத்தில் மொத்தம் 6.19 கோடி வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் ஆண்கள் 3.04 கோடி, பெண்கள் 3.15 கோடி பேர்.

மூன்றாம் பாலின வாக்காளார்கள் 8294. பெண் வாக்காளர்களே இங்கு அதிகமாக உள்ளனர். தேர்தலின்போது அனைத்து வாக்குச்சாவடிகளிலும் அடிப்படை வசதிகள் இருப்பது உறுதி செய்யப்படும். தேர்தலுக்கு 7 நாட்களுக்கு முன்பு வரை பூத் ஸ்லிப் வழங்க ஏற்பாடு செய்யப்படும்.

மாநிலங்களுக்கு இடையே சோதனைச் சாவடி அமைத்து தீவிரமாகக் கண்காணிக்கப்படும். பதற்றமான வாக்குச் சாவடிகள் கண்டறியப்பட்டு துணை ராணுவப் படை கண்காணிப்பு உறுதிப்படுத்தப்படும்” என்றார்.

“தமிழகத்தில் ஒரே கட்டமாக மக்களவைத் தேர்தல் நடத்த வேண்டும் என்ற கட்சிகளின் கோரிக்கை பரிசீலிக்கப்படும். ஆன்லைன் பணப் பரிவர்த்தனைகளும் கண்காணிக்கப்படும்” எனத் தெரிவித்தார்.

Tags: indian election commission
Share
Tweet
SendShare
Previous Post

இந்தியா – இங்கிலாந்து டெஸ்ட் : இரண்டாம் நாள் முடிவு!

Next Post

தாய்லாந்து அயுத்யா நகரத்திற்கு விஜயம் செய்த பீகார் ஆளுநர்!

Related News

கோவையில் பாஜக சார்பில் தேசிய கொடி பேரணி; நூற்றுக்கணக்கானோர் பங்கேற்பு

இந்திய பாதுகாப்புத்துறையின் GAME CHANGER ‘பிரம்மோஸ்-NG’ – சிறப்பு தொகுப்பு!

செப். 17 ஆம் தேதி மதுரை மீனாட்சியம்மன் கோவில் கும்பாபிஷேகம் – மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு!

விருதுநகர் இருக்கண்குடி மாரியம்மன் கோயில் புதிய கட்டடங்கள் – முதலமைச்சர் விஜய் திறந்து வைத்தார்!

விழிஞ்ஞம் சர்வதேச துறைமுக வணிக செயல்பாடு – கேரள முதல்வர் தொடங்கி வைத்தார்!

முதல்வர் அறை மாற்றப்படுவது ஏன்? – அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விளக்கம்!

Load More

அண்மைச் செய்திகள்

இந்தியாவின் தேர்தல் முறைக்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பாராட்டு!

தஞ்சையில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளரின் கன்னத்தில் அறைந்த இளைஞர் – 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு!

இன்றைய தங்கம் விலை!

விரைவில் மேட்டூர் அணை நிரம்பி 120 அடியை எட்டும் – குடியரசு துணை தலைவர் சிபிஆர் நம்பிக்கை!

நேபாள ராணுவ கௌரவ ஜெனரல் பதவி – இந்திய ராணுவ தலைமைத் தளபதி ஜெனரல் தீரஜ் சேத்திற்கு கௌரவம்!

நீ ஒரு போலி செய்தியாளர் – அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் வாக்குவாதம்!

தகுதியானவர்களுக்கு VB-G RAM G  திட்ட பலன்கள் சென்றடைவதை உறுதி செய்ய வேண்டும் – நயினார் நாகேந்திரன்

வால்பாறை மலைப்பாதையில் சுற்றுலா வேன் கவிழ்ந்து விபத்து – 20 பேர் காயம்!

சென்னையில் லஞ்சம் வாங்கிய புகாரில் சிக்கிய போலீசார் மீது துறை ரீதியான நடவடிக்கை!

சென்னை-திருவனந்தபுரம் தொழில் வழித்தட திட்டத்தை பரிசீலிக்க வேண்டும் – மத்திய நிதியமைச்சரிடம் அமைச்சர் கீர்த்தனா கோரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies