இந்திய பாதுகாப்புத்துறையின் GAME CHANGER 'பிரம்மோஸ்-NG' - சிறப்பு தொகுப்பு!
Oct 4, 2026, 02:10 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இந்திய பாதுகாப்புத்துறையின் GAME CHANGER ‘பிரம்மோஸ்-NG’ – சிறப்பு தொகுப்பு!

Ramamoorthy S by Ramamoorthy S
Aug 18, 2026, 08:00 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

உலகின் மிகச்சிறந்த SUPERSONIC CRUISE MISSILE என்றழைக்கப்படும் பிரம்மோஸ் ஏவுகணையின் அடுத்த VERSION-ஐ இந்தியா உருவாக்கி வருகிறது. அதன் சிறப்புகள் குறித்து பார்க்கலாம்.

இந்திய ராணுவத்துக்கு வலிமை சேர்க்கும் முக்கிய தூணாக விளங்குவது பிரம்மோஸ் ஏவுகணை. இந்திய – ரஷ்ய கூட்டுத்தயாரிப்பான பிரம்மோஸ் தற்போது அடுத்தகட்டத்தை நோக்கி நகர்ந்திருக்கிறது. ‘பிரம்மோஸ்-NG’ அதாவது BrahMos-Next Generation என்ற பெயரில் புதுவடிவம் பெறுகிறது. இது இந்திய பாதுகாப்புத்துறையில் ஒரு GAME CHANGER-ஆக இருக்கும் என்கிறார்கள் வல்லுநர்கள்.

தற்போதைய பிரம்மோஸ் ஏவுகணைக்கும் பிரம்மோஸ்-NG-க்கும் உள்ள மிக முக்கிய வேறுபாடு அதன் எடை மற்றும் அளவுதான். பிரம்மோஸ் ஏவுகணை சுமார் 3 டன் எடை கொண்டது. ஆனால், பிரம்மோஸ்-NG சுமார் 1.3 டன் எடை மட்டுமே கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் ஏவுகணையின் எடை பாதியாக குறைந்துள்ளது. இருப்பினும் எதிரிகளை நோக்கி சீறிப்பாயும் வேகத்தில் எந்த மாற்றமும் இல்லை. பழைய 3 டன் பிரம்மோஸ் ஏவுகணையை, சுகோய்-30 எம்.கே.ஐ. போன்ற கனரக போர் விமானங்களில் மட்டுமே பொருத்த முடியும். அதுவும் ஒரு விமானத்தில் அதிகபட்சம் ஒரு ஏவுகணையை மட்டுமே சுமந்து செல்ல முடியும். ஆனால், பிரம்மோஸ்-NG சிறியதாக இருப்பதால், ஒரு சுகோய் போர் விமானத்தில் ஒரே நேரத்தில்
ஒன்றுக்கும் மேற்பட்ட பிரம்மோஸ்-NG ஏவுகணைகளைச் சுமந்து செல்ல முடியும். மேலும், Tejas Mk1A, HAL Tejas Mk2 போன்ற விமானங்களிலும் பிரம்மோஸ்-NG ஏவுகணையை எடுத்துச் செல்லமுடியும். இதன்மூலம் இந்தியாவின் வான்வழிப் பாதுகாப்பு அதிகரிக்கும்.

முந்தைய VERSION-ஐவிட கூடுதல் புத்திசாலிதனத்துடன் பிரம்மோஸ்-NG ஏவுகணை உருவாக்கப்படுகிறது. இது எதிரிகளின் ரேடாரில் எளிதில் சிக்காது. வான் பாதுகாப்பு அமைப்புகளையும் ஏமாற்றிவிடும். முற்றிலும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட AESA Radar பொருத்தப்பட்டிருப்பதால் நகரும் இலக்குகளைக்கூட மிகத்துல்லியமாக தாக்கும் திறன் பிரம்மோஸ்-NG-க்கு உண்டு. கப்பல் மற்றும் நீர்மூழ்கிக் கப்பல்களில் இருந்தும் பிரம்மோஸ்-NG-யை ஏவமுடியும். முந்தைய பெரிய பிரம்மோஸ் ஏவுகணைகளுக்குப் பிரத்யேகமான பெரிய லாஞ்சர்கள் தேவைப்பட்ட நிலையில், இந்த NG ஏவுகணையை எந்தவொரு போர் தளவாடத்திலும் எளிதில் பொருத்த முடியும்.

சோதனைக்குப் பிறகு உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள தொழிற்சாலையில் பிரம்மோஸ்-NG-ன் தயாரிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்சார்பு இந்தியா திட்டத்தின் மாபெரும் வெற்றியாக இது கருதப்படுகிறது.

பிரம்மோஸ்-NG என்பது குறைந்த எடையிலும் அளவிலும் தயாரிக்கப்படும் ஒரு ஆயுதம் மட்டுமல்ல. அதிக இலக்குகளை, அதிவேகத்தில் துல்லியமாகத் தாக்கும் இந்த ஏவுகணை, இந்திய முப்படைகளின் வலிமையை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்கிறது. பாதுகாப்பைத் தாண்டி, உலகளாவிய ஆயுதச் சந்தையில் இந்தியாவின் வர்த்தக எல்லையை விரிவுப்படுத்துவதிலும் பிரம்மோஸ்-NG ஒரு முக்கிய கருவியாகச் செயல்படப் போகிறது என்பதில் எவ்வித ஐயமில்லை.

Tags: HAL Tejas Mk2brahmos missileIndian Armed Forces.world's best supersonic cruise missile.Tejas Mk1A
Share
Tweet
SendShare
Previous Post

செப். 17 ஆம் தேதி மதுரை மீனாட்சியம்மன் கோவில் கும்பாபிஷேகம் – மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு!

Next Post

கோவையில் பாஜக சார்பில் தேசிய கொடி பேரணி; நூற்றுக்கணக்கானோர் பங்கேற்பு

Related News

கொடைக்கானல் நோக்கி படையெடுத்த சுற்றுலா பயணிகள் : 3- வது நாளாக கடும் போக்குவரத்து நெரிசல்!

அரிசி விலை உயர்வை கட்டுப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் – இல்லத்தரசிகள் கோரிக்கை!

தாராபுரம் பிரச்சாரத்தில் குழந்தைகளை பயன்படுத்தியதாக புகார் – உதயநிதி மீது வழக்குப்பதிவு!

முதலமைச்சருக்கு ஏன் இவ்வளவு பதற்றம்? – அவர் ஆட்சி மேல் அவருக்கே நம்பிக்கை இல்லை – மு.க.ஸ்டாலின்

ஹாக்கியில் தங்கம் வென்ற மகளிர் அணிக்கு தலா 11 லட்சம் – ஒடிசா அரசு அறிவிப்பு!

ஊழல் வழக்குகளில் சிக்கும் அரசு ஊழியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை – உயர் நீதிமன்றம் உத்தரவு!

Load More

அண்மைச் செய்திகள்

தாராபுரத்தில் ரூ. 70 லட்சம் பறிமுதல் – காவல் நிலையம் முற்றுகை!

தமிழகத்தில் போதைப்பொருள் பயன்பாடு அதிகரிப்பு – நயினார் குற்றச்சாட்டு!

இடைத்தேர்தல் பரப்புரை இன்றுடன் நிறைவு – தாராபுரத்தில் முதல்வர் விஜய் ரோடு ஷோ!

F-16 போர் விமானங்களை பாரமரிக்க முடியாமல் தரையிறக்கிய உக்ரைன் – சிறப்பு தொகுப்பு!

ஆசிய விளையாட்டு போட்டியில் தங்கம் வென்ற இந்திய ஆடவர் அணிக்கு முதல்வர் வாழ்த்து!

தவெக வேட்பாளரை உருவகேலி செய்த திமுக தலைவர் ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும் – அமைச்சர் நிர்மல்குமார்

முதலமைச்சர் விஜய்க்கு தோல்வி பயம் வந்துவிட்டது – நயினார் நாகேந்திரன்

பாபநாசம் தாமிரபரணி ஆறு மற்றும் மண்டபத்தில் உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் நேரில் ஆய்வு!

தோல்விக்கு SIR மீது பழிபோடாமல் மக்களின் ஆதரவு குறைந்ததை எதிர்கட்சிகள் ஏற்க வேண்டும் – தமிழிசை செளந்தரராஜன்

தாராபுரம் இடைத்தேர்தல் – காவல்துறையினருக்கான தபால் வாக்குப்பதிவு தொடக்கம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies