தவெக வேட்பாளர் சத்திய பாமாவை உருவகேலி செய்த ஸ்டாலினுக்கு பாஜக மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பெண்கள் அரசியலுக்கு வருவதே சிரமமான நிலையில் உருவக் கேலி செய்வது அவர்களை மேலும் பாதிக்கும் என தெரிவித்தார்.
பெண்களை பற்றி ஆண் அரசியல் தலைவர்கள் இனி எச்சரிக்கையுடனும் மரியாதையுடனும் பேச வேண்டும் என்றும் அவர் கூறினார்.
திமுக தொண்டர்கள் மட்டுமல்லாமல் தலைவர்களின் பேச்சுகளிலும் உருவக் கேலி வெளிப்படுகிறது என்றும் அவர் தெரிவித்தார்.
“தோல்விக்கு SIR மீது பழிபோடாமல் மக்களின் ஆதரவு குறைந்ததை எதிர்க்கட்சிகள் ஏற்க வேண்டும் என்றும், அவர் குறிப்பிட்டார்.
“தேர்தல் ஆணையர் குறித்து பேசுவதை விட காவிரி நீர் பிரச்னையில் தவெக கவனம் செலுத்த வேண்டும் என்றும், “ரோடு ஷோவுக்காக செலவிடும் நேரத்தை மக்கள் நலப்பணிகளுக்கு முதலமைச்சர் பயன்படுத்த வேண்டும் என்றும் தமிழிசை குறிப்பிட்டார்.
















