தாராபுரம் இடைத்தேர்தலில் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ள காவல்துறையினருக்கான தபால் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.
தாராபுரம் தொகுதியில் வரும் 6-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதற்காக தொகுதி முழுவதும் 320 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. தொகுதியில் மொத்தம் 2 லட்சத்து 23 ஆயிரத்து 247 வாக்காளர்கள் உள்ளனர்.
தேர்தல் நாளில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடும் காவல்துறையிருக்கு, தபால் வாக்குப்பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இடைத்தேர்தலில் தாராபுரம் தொகுதியில் வசிக்கும் காவல்துறையினர் 195 பேர் தபால் வாக்கு செலுத்த உள்ளனர். இப்பணிகள் தொடங்கிய நிலையில், இதுவரை 50 காவலர்கள் தங்களது வாக்குகளை பதிவு செய்துள்ளனர்.
















