மெட்ராஸ் ஐஐடியின் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுடன் உரையாடும் வாய்ப்பைப் பெற்றதில் மகிழ்ச்சி அடைகிறேன் என தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள எக்ஸ் தள பதிவில், மெட்ராஸ் ஐஐடியின் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுடன் உரையாடும் வாய்ப்பைப் பெற்றதில் மகிழ்ச்சி அடைகிறேன். அதிகாரத்தை மையமாகக் கொண்ட ஆட்சியில் இருந்து கடந்த 10 ஆண்டுகளில் மக்களை மையமாகக் கொண்ட ஆட்சி எவ்வாறு பரிணமித்துள்ளது என்பதை விரிவாக விளக்கியுள்ளார் பிரதமர் மோடி அவர்கள்.
காவல்துறைக்கும் பொதுச் சேவைக்கும் இடையே உள்ள பொதுவான தன்மைகள், இன்றைய உலகில் தொழில்நுட்ப வளர்ச்சி, விக்சித் பாரதத்திற்கான நமது பிரதமரின் தொலைநோக்கு மற்றும் இந்த இலக்கை அடையத் தேவையான வளர்ச்சி வேகம் குறித்து மாணவர்களிடம் கேள்விகள் கேட்கப்பட்டன என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.