துவாரகாதீசர் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார் பாரத பிரதமர் மோடி!
Oct 29, 2026, 02:35 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

துவாரகாதீசர் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார் பாரத பிரதமர் மோடி!

Murugesan M by Murugesan M
Feb 25, 2024, 12:06 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

பாரத பிரதமர் நரேந்திர மோடி குஜராத்தில் உள்ள புகழ்பெற்ற துவாரகாதீசர் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார்.

பாரத பிரதமர் நரேந்திர மோடி 2 நாள் பயணமாக நேற்று குஜராத் சென்றார். இன்று காலை 8.30 மணியளவில் ஒகா பெருநிலப் பகுதியையும், பெய்ட் துவாரகா தீவையும் இணைக்கும் வகையில் சுமார் ரூ.980 கோடி செலவில் கட்டப்பட்ட கேபிள் பாலத்தை திறந்து வைத்தார்.

பாலம் திறப்பதற்கு முன்னதாக இன்று காலை பாரத பிரதமர் பெய்ட் துவாரகாவில் உள்ள கிருஷ்ணர் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்தார்.

பெருமாளின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் 101 வது திவ்ய தேசமான இக்கோவிலுக்குள் சென்ற பிரதமர் அங்கிருந்த பக்தர்களும், கோவில் நிர்வாகிகளும் வரவேற்றனர். பின்னர் சுவாமிக்கு பூ மாலை அணிவித்து பூஜைகள் செய்தார்.

பின்னர் கோவில் நிர்வாகிகள் பிரதமர் மோடிக்கு பொன்னாடை போர்த்தி, பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் உருவச் சிலையை பரிசாக வழங்கினர்.  அங்கிருந்த உண்டியலில் காணிக்கை செலுத்திவிட்டு இறைவனிடம் ஆசி பெற்று பாலம் திறப்பு விழாவிற்கு சென்றார் பிரதமர் மோடி.

துவாரகாதீஷ் கோவில் கோமதி நதிக்கரையை ஒட்டிய உயரமான இடத்தில் அமைந்துள்ளது. பல படிக்கட்டுகள் ஏறித்தான் உள்ளே செல்ல வேண்டும். இக்கோவில் கோபுரத்தின் உயரம் 51.8 மீட்டர் ஆகும்.  நான்கு நிலைகளைக் கொண்ட கோபுரத்தின் மேல் உயர்ந்து நிற்கும் கூர்மையான கோபுரத்தைப் பார்த்தால் பிரமிப்பாக காட்சியளிக்கும்.

72 தூண்களைக் கொண்ட பெரிய நுழைவாயில் மண்டபமும் உள்ளது. கருவறையில் துவாரகாதீஷ் ஸ்ரீகிருஷ்ணன் சிரசில் கொண்டையுடன் நின்ற திருக்கோலத்தில் பக்தர்களுக்குக் காட்சியளிக்கிறார். இக்கோவிலை ஜெகத்மந்திர் என்றும் அழைக்கிறார்கள்.

Tags: prime minister narendra modigujaratDWARKA:Dwarkadhish temple
Share
Tweet
SendShare
Previous Post

குஜராத்தில் சுதர்சன் சேது பாலத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி!

Next Post

IIT-Madras மாணவர்களுடன் உரையாடும் வாய்ப்பு பெற்றதில் மகிழ்ச்சி : அண்ணாமலை

Related News

ரூ.100 கோடி மோசடி வழக்கு; அன்பில் மகேஷை ஜாமினில் எடுத்து விசாரிக்க காவல்துறை மனு

சட்ட மேலவைத் தேர்தல்; காங்கிரசுக்கு பெரும் பின்னடைவு

டாடா சன்ஸ் நிறுவனத் தலைவர் நியமன விவகாரம்;ராகுலுக்கு நிர்மலா சீதாராமன் பதிலடி

ரூ.29,000 கோடி மதிப்பிலான புதிய திட்டங்கள்; மத்திய அமைச்சரவை ஒப்புதல்

அருணாச்சலபிரதேசத்தில் சீனா கட்டவுள்ள பிரமாண்ட அணைக்கு Gen Z இளைஞர்கள் எதிர்ப்பு – பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

ஸ்பெயினில் அதிவேக ரயில்கள் மோதி விபத்து;46 பேர் உயிரிழப்பு

Load More

அண்மைச் செய்திகள்

21% லாபம் சம்பாதித்த முதலீட்டாளர்கள்; ஜியோ IPO வாங்கியவர்களுக்கு அடித்த ஜாக்பாட்

அரிசி விலையை கட்டுப்படுத்த ஆந்திராவில் இருந்து நெல் மூட்டைகள் கொண்டு வர அனுமதி – அமைச்சர்கள் செங்கோட்டையன், வெங்கட்ரமணன் தகவல்!

அன்பில் மகேஷ் கைதின் போது போலீசாருடன் வாக்குவாதம் – சேகர்பாபு மீது வழக்குப்பதிவு!

ரயிலில் பட்டாசு எடுத்து சென்றால் 3 ஆண்டுகள் சிறை தண்டனை : ரயில்வே பாதுகாப்புப் படை எச்சரிக்கை!

இன்றைய தங்கம் விலை!

கோயிலுக்குள் யாரை அனுமதிக்கலாம் – உயர் நீதிமன்ற மதுரை கிளை விளக்கம்!

மருந்துகளின் அதிகபட்ச சில்லறை விலைக்கும், கொள்முதல் விலைக்கும் இடையே மிகப்பெரிய வித்தியாசம் இருப்பது ஏன்? – உச்ச நீதிமன்றம் கேள்வி!

குற்ற வழக்கு நிலுவையில் இருப்பதை காரணம் காட்டி வெளிநாடு செல்லும் உரிமையை மறுக்கக் கூடாது – உயர் நீதிமன்றம்

அதிக மின் கட்டணம் விதிப்பு – சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு!

தமிழகத்தில் 13 ஆண்டுகளுக்கு பின் ஆட்டோ கட்டணம் உயர்வு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies