இங்கிலாந்துக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டி முதல் இன்னிங்கிஸ் முடிவில் இந்திய அணி 307 ரன்களை எடுத்துள்ளது.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி, 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. நான்காவது டெஸ்ட் போட்டி ராஞ்சியில் நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி அனைத்து விக்கெட்களையும் இழந்து 353 ரன்களை எடுத்தது. இங்கிலாந்து அணியில் அதிகபட்சமாக ஜோ ரூட் 122 ரன்களை எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இந்திய அணியில் அதிகபட்சமாக ஜடேஜா 4 விக்கெட்களும், அறிமுக வீரரான ஆகாஷ் தீப் 3 விக்கெட்களும் வீழ்த்தினர்.
இதைத் தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணி இரண்டாம் நாள் முடிவில் 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் 219 ரன்களை எடுத்திருந்தது. தொடக்க வீரராக களமிறங்கிய ஜெய்ஸ்வால் 8 பௌண்டரீஸ் 1 சிக்சர் என மொத்தமாக 73 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார்.
இதில் துருவ் ஜூரெல் 30 ரன்களும், குலதீப் யாதவ் 17 ரன்களும் எடுத்து களத்தில் இருந்தனர். இன்றைய நாள் தொடக்கத்தில் குலதீப் யாதவ் 28 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
பின்னர் களமிறங்கிய ஆகாஷ் தீப் 9 ரன்களில் ஆட்டமிழந்தார். நிதானமாக விளையாடி வந்த துருவ் ஜூரெல் 90 ரன்களை எடுத்து இந்தியாவை முன்னிலை கொண்டுவந்தார். இறுதியாக இந்தியா 307 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இதனால் இந்திய அணி 46 ரன்கள் பின்தங்கியுள்ளது. இங்கிலாந்து அணியின் சார்பில் சிறப்பாக பந்து வீசிய சோயிப் பஷீர் 5 விக்கெட்டும், டாம் ஹார்ட்லீ 3 விக்கெட்டும், வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.