2028-29க்குள் பாதுகாப்பு உற்பத்தி ரூ.3 லட்சம் கோடியாக இருக்கும் – ராஜ்நாத் சிங்
Mar 15, 2026, 08:27 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

2028-29க்குள் பாதுகாப்பு உற்பத்தி ரூ.3 லட்சம் கோடியாக இருக்கும் – ராஜ்நாத் சிங்

Murugesan M by Murugesan M
Feb 25, 2024, 02:42 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

முந்தைய ஆட்சிக்காலத்தில் ஆயுத இறக்குமதியாளராக இருந்த இந்தியா,  பிரதமர் நரேந்திர மோடி ஆட்சியில், ஆயுத ஏற்றுமதி நாடாக மாறியுள்ளது என்று மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியதாவது, “பாரத பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, 2047-ஆம் ஆண்டுக்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றுவதற்கு கவனம் செலுத்துகிறது.

இறக்குமதி செய்யப்படும் இராணுவத் தளவாடங்களைக் கொண்டு எந்தவொரு இராணுவமும் தனது நாட்டை பாதுகாக்க முடியாது. பாதுகாப்பு உற்பத்தியில் தற்சார்பு என்பது இன்றைய காலகட்டத்தில் இந்தியாவுக்கு முக்கியமானது. பாதுகாப்புத் தளவாட உற்பத்தி ரூ.1 லட்சம் கோடியைத் தாண்டியுள்ளது. இது தற்சார்புக்கான அரசின் தொடர்ச்சியான முயற்சிகள் பலனளிக்கத் தொடங்கி உள்ளன.

உத்தரபிரதேசம் மற்றும் தமிழ்நாட்டில் பாதுகாப்புத் தளவாடங்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இந்தியாவில் நவீன இராணுவத் தளவாடங்கள் தயாரிக்கப்படுவது மட்டுமின்றி, நட்பு நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுவதை மத்திய அரசு உறுதிசெய்து வருகிறது.

முன்பு, இந்தியா ஒரு ஆயுத இறக்குமதியாளராக இருந்தது. ஆனால், இன்று, பாரத பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையின் கீழ், ஆயுதம் ஏற்றுமதி செய்யும் முதல் 25 நாடுகளின் பட்டியலில் இடம் பிடித்துள்ளது. தற்போது பாதுகாப்பு ஏற்றுமதி ரூ.16 ஆயிரம் கோடியைத் தொட்டுள்ளது. 2028-29 ஆம் ஆண்டில், வருடாந்திர பாதுகாப்பு உற்பத்தி ரூ.3 லட்சம் கோடியாக இருக்கும். பாதுகாப்பு தளவாடங்கள் ஏற்றுமதி ரூ.50 ஆயிரம் கோடியை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

2024-25 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் பாதுகாப்பு அமைச்சகத்திற்கு ரூ.6.21 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.

Tags: Rajnath SinghViksit Bharat"3 lakh croreannual defence production
ShareTweetSendShare
Previous Post

இந்தியா – இங்கிலாந்து டெஸ்ட் : 46 ரன்கள் இங்கிலாந்து முன்னிலை !

Next Post

முதல் புல்லட் ரயில் சேவை: மத்திய அமைச்சர் கொடுத்த சூப்பர் அப்டேட்

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies