இங்கிலாந்துக்கு எதிரான 4-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற 192 ரன்கள் இலக்காக உள்ளது.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி, 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. நான்காவது டெஸ்ட் போட்டி ராஞ்சியில் நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி அனைத்து விக்கெட்களையும் இழந்து 353 ரன்களை எடுத்தது. இங்கிலாந்து அணியில் அதிகபட்சமாக ஜோ ரூட் 122 ரன்களை எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்திய அணியில் அதிகபட்சமாக ஜடேஜா 4 விக்கெட்களும், அறிமுக வீரரான ஆகாஷ் தீப் 3 விக்கெட்களும் வீழ்த்தினர்.
இதைத் தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணி முதல் இன்னிங்ஸ் முடிவில் 307 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இதைத் தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்து அணி 145 ரன்களை எடுத்து ஆல் அவுட் ஆனது.
இங்கிலாந்து அணியில் அதிகபட்சமாக ஜாக் கிராவ்லி 60 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார். ஜானி பேர்ஸ்டோ 30 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரங்களில் ஆட்டமிழக்க இங்கிலாந்து அணி 145 ரன்களை எடுத்து ஆல் அவுட் ஆனது. இந்திய அணியில் அதிகபட்சமாக அஸ்வின் 5 விக்கெட்களை வீழ்த்தினார்.
குலதீப் யாதவ் 4 விக்கெட்களும், ஜடேஜா 1 விக்கெட்டும் வீழ்த்தினர். தற்போது இந்திய அணி 191 ரன்கள் முன்னிலையில் உள்ளது. இதனால் இந்திய அணி வெற்றி பெற 192 ரன்கள் இலக்காக உள்ளது.