டெஸ்ட் கிரிக்கெட்டின் வரலாற்றில் இந்திய மண்ணில் அதிக விக்கெட்டுகள் எடுத்த வீரர் என்ற ஜாம்பவான் அனில் கும்ப்ளேவின் வாழ்நாள் சாதனையை ரவிச்சந்திரன் அஸ்வின் முறியடித்துள்ளார்.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி, 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. நான்காவது டெஸ்ட் போட்டி ராஞ்சியில் நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 353 ரன்களை எடுத்தது. இதை தொடர்ந்து களமிறங்கிய இந்தியா 307 ரன்களை எடுத்தது. பின்னர் களமிறங்கிய இங்கிலாந்து 145 ரன்களை எடுத்தது. இறுதியாக இங்கிலாந்து அணி 191 ரன்கள் முன்னிலையில் இருந்தது.
இதில் இரண்டாவது இன்னிங்ஸ் இந்திய வீரர் அஸ்வின் 5 விக்கெட்களை வீழ்த்தினார். இதன் மூலம் அவர் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டின் வரலாற்றில் இந்திய மண்ணில் அதிக விக்கெட்டுகள் எடுத்த வீரர் என்ற ஜாம்பவான் அனில் கும்ப்ளேவின் வாழ்நாள் சாதனையை அவர் முறியடித்துளளார்
இதற்கு முன் இந்திய மண்ணில் அதிகபட்சமாக அனில் கும்ப்ளே 350 டெஸ்ட் விக்கெட்களை எடுத்திருந்தார். தற்போது அஸ்வின் முன்னிலை வகிக்கிறார். இந்த பட்டியலில் அனில் கும்ப்ளே 350, ஹர்பஜன் சிங் 265, கபில் தேவ் 219, ரவீந்திர ஜடேஜா 210* விக்கெட்களுடன் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.