என் மண் என் மக்கள் யாத்திரை நிறைவு விழாவுக்காக வரும் 27ஆம் தேதி பல்லடத்தில் அணி திரள்வோம் என தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அழைப்பு விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் என் மண் என் மக்கள் நடைபயணம் வாயிலாக 232 தொகுதிகளை கடந்து விட்டோம் என தெரிவித்துள்ளார்.
இந்த யாத்திரைக்கு உதவிய பாஜக நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினருக்கும் அவர் நன்றி தெரிவித்தார். தமிழக அரசியலில் மிகப்பெரிய மாற்றம் 2024ஆம் ஆண்டில் ஏற்படும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார். .
இந்த யாத்திரை பல்லடத்தில் பிப்ரவரி 27ஆம் தேதி நிறைவு பெற உள்ளதாகவும், விழாவில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளதாகவும் அவர் கூறினார். எனவே தமிழக மக்கள் அனைவரும் பல்லடத்தில் அணி திரள்வோம் என அண்ணாமலை கேட்டுக்கொண்டுள்ளார்.
232 தொகுதிகளை கடந்து விட்டோம்!
கடைசி இரண்டு தொகுதிகளை கடப்பதற்காக உங்களுக்காக காத்திருக்கின்றோம்.
பிப்ரவரி 27 ஆம் தேதி உங்களை பல்லடத்தில் சந்திப்போம்.
இதுதாங்க நேரம் – இனி எல்லாம் மாறும்!
We have crossed 232 constituencies
Waiting to cross the last two constituencies along… pic.twitter.com/Ku2j70JszY
— K.Annamalai (@annamalai_k) February 25, 2024