திமுகவைச் சேர்ந்தவர்கள், தமிழகத்தில் உள்ள அரசு மணல் குவாரிகளில் அரசு நிர்ணயத்த அளவைவிடக் கூடுதலாக மணல் அள்ளி அரசுக்கு பல கோடி ருபாய் இழப்பு ஏற்படுத்தினர். இது தொடர்பாக புகார் எழுந்தது. அதன்பேரில், அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.
அத்துடன், மணல் குவாரி அதிபர்கள் கரிகாலன், இராமசந்திரன் உள்ளிட்டோரின் சென்னை, புதுக்கோட்டை, திண்டுக்கல் ஆகிய இடங்களில் உளள வீடு அலுவலங்களில் திடீர் சோதனை நடத்தி முக்கிய ஆவணங்களைப் பறிமுதல் செய்தனர்.
இந்த நிலையில், சட்டவிரோத மணல் குவாரி தொடர்பான விவகாரத்தில், கரூர், வேலூர் உள்ளிட்ட 5 மாவட்ட ஆட்சியர்களுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. இந்த சம்மனை எதிர்த்து, 5 மாவட் ஆட்சியர்களும், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து தடை பெற்றனர்.
இதனிடையே, சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக, உச்ச நீதிமன்றத்தில், அமலாக்கத்துறை மனு தாக்கல் செய்தது.
சட்ட விரோத மணல் விற்பனை தொடர்பான அமலாக்கத்துறையின் மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, அமலாக்கத் துறைக்கு எதிராக எப்படி மாவட்ட ஆட்சியர்கள் ரிட் மனு தாக்கல் செய்ய முடியும்? என்றும், நாடாளுமன்றத்தின் சட்டத்தை தமிழ்நாடு அரசு மதிக்க வேண்டாமா? என்றும் உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.
உச்ச நீதிமன்றத்தின் இந்த கேள்வியால், தி.மு.க அரசு அதிர்ச்சி அடைந்துள்ளது.