13 ஆண்டுகளுக்கு மேலாக ஹாக்கி இந்தியாவின் தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்தவர் தான் எலினா நார்மன். இந்த நிலையில், இவர் யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் தனது பதவியை ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளார்.
எலினா நார்மன் பதவியில் இருந்த காலத்தில், இந்திய ஆண்கள் மற்றும் பெண்கள் ஹாக்கி அணிகள் சிறப்பாக விளையாடி புதிய சாதனைகளை படைத்தது.
இவரது, பதவியின் போது இந்திய ஹாக்கி அணி சிறந்த உலக தரவரிசையை அடைந்தது. டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இந்திய ஆண்கள் அணி 41 ஆண்டுகளுக்குப் பிறகு வெண்கல பதக்கம் வென்றது. அதே சமயம் இந்திய மகளிர் அணி நான்காவது இடத்தை பிடித்தது.
எலினா நார்மனின் ராஜினாமாவை ஹாக்கி இந்தியா தலைவரும் இந்திய அணியின் முன்னாள் கேப்டனுமான திலிப் திர்கே ஏற்றுக்கொண்டார். மேலும், இதுவரை ஹாக்கி இந்தியா தலைமை அதிகாரியாக அவர் செய்த பணிகளை பாராட்டி நன்றி தெரிவித்தார்.
ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த எலினா நார்மன், விளையாட்டு நிறுவனத்தில் பணியாற்றுவதற்காக 2007ல் இந்தியா வந்தார். 2011-ல் ஹாக்கி இந்தியா கூட்டமைப்பின் முதல் தலைமை நிர்வாக அதிகாரியாக நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.