நிர்மலா சீதாராமன், ஜெய்சங்கர் மக்களவை தேர்தலில் போட்டி! - மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி தகவல்
Sep 6, 2026, 12:54 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நிர்மலா சீதாராமன், ஜெய்சங்கர் மக்களவை தேர்தலில் போட்டி! – மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி தகவல்

Murugesan M by Murugesan M
Feb 27, 2024, 06:16 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கரும், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாரானும் வரும் மக்களவைத் தேர்தலில் போட்டியிடுவது உறுதியாகி உள்ளது என மத்திய நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி,

“மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாரானும், வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கரும் வரும் மக்களவைத் தேர்தலில் போட்டியிடுவது ஏறக்குறைய உறுதியாகி உள்ளது. அவர்கள் கர்நாடகாவில் போட்டியிடுவார்களா அல்லது வேறு மாநிலத்தில் போட்டியிடுவார்களா என்பது இன்னும் முடிவாகவில்லை” என தெரிவித்தார்.

அவர்கள் பெங்களூருவில் போட்டியிட வாய்ப்புள்ளதா என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த அவர், “இன்னும் எதுவும் முடிவாகாத நிலையில் நான் எப்படி பதிலளிக்க முடியும். யார் வேண்டுமானாலும் போட்டியிடலாம் என்று மட்டும்தான் என்னால் சொல்ல முடியும். இவர் இவர் போட்டியிடுவார் எனக் குறிப்பிட்டு என்னால் சொல்ல முடியாது. பாஜக ஒரு தேசிய கட்சி. யார் எங்கே போட்டியிடுவது என்பதை எங்கள் தலைவர்கள் முடிவு செய்வார்கள்” எனக் கூறினார்.

கடந்த 2008ல் பாஜகவில் இணைந்த நிர்மலா சீதாராமன், 2014 வரை கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளராக இருந்தார். பின்னர், நரேந்திர மோடியின் அமைச்சரவையில் இணை அமைச்சராக நியமிக்கப்பட்டார். 2014ல் ஆந்திரப் பிரதேசத்தில் இருந்து மாநிலங்களவைக்குத் தேர்வு செய்யப்பட்ட நிர்மலா சீதாராமன், 2016ல் கர்நாடகாவில் இருந்து மாநிலங்களவைக்குத் தேர்வு செய்யப்பட்டார். 2017 முதல் 2019 வரை பாதுகாப்புத்துறை அமைச்சராக நிர்மலா சீதாராமன் பதவி வகித்தார்.

தூதரகப் பணியில் இருந்த எஸ். ஜெய்சங்கர், 2015ல் வெளியுறவுத்துறை செயலாளராக பொறுப்பேற்றார். அதன் பின்னர் 2019ல் வெளியுறவுத்துறை அமைச்சராக பதவியேற்றார். குஜராத்தில் இருந்து இவர் மாநிலங்களவைக்குத் தேர்வு செய்யப்பட்டார்.

பிரதமர் நரேந்திர மோடியின் அமைச்சரவையில் மிக முக்கிய துறைகளின் அமைச்சர்களாக இருப்பவர்கள் நிர்மலா சீதாரானும், எஸ். ஜெய்சங்கரும், மாநிலங்களவை உறுப்பினர்களாக இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: Jai sankarBJP Nirmala Sitharaman
Share
Tweet
SendShare
Previous Post

பாஜக 400 எம். பி-கள் தாண்டி ஆட்சியில் அமரும்! – அண்ணாமலை

Next Post

ஹாக்கி இந்தியாவின் தலைமை நிர்வாக அதிகாரி ராஜினாமா!

Related News

சென்னை 2-வது விமான நிலையத்திற்கு இரு இடங்கள் தேர்வு என தகவல்!

ராஜபாளையத்தில் விநாயகர் சதுர்த்திக்காக தயார் செய்யப்பட்ட சுவாமி சிலைகள் ஊர்வலம்!

கடற்படை கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தினால் ஈரானின் எண்ணெய் கப்பல்கள் முற்றிலும் அழிக்கப்படும் – அமெரிக்கா எச்சரிக்கை!

ஆசிய கோப்பை மகளிர் கிரிக்கெட் – பாகிஸ்தானை பந்தாடியது இந்தியா!

லண்டன் குருத்வாராவில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் வழிபாடு!

தமிழகம் முழுவதும் சுமார் 1.5 லட்சம் இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்க ஏற்பாடு – காடேஸ்வரா சுப்பிரமணியம்

Load More

அண்மைச் செய்திகள்

உங்க பையன் தான் காரணம் – புதுக்கோட்டை திமுக செயற்குழு கூட்டத்தில் மோதல்!

சென்னையில் தவெக நிர்வாகி வெட்டிக்கொலை – மர்ம கும்பலை தேடும் போலீஸ்!

கும்மிடிப்பூண்டி அருகே அரசு மருத்துவமனை வளாகத்தில் மின்சாரம் தாக்கி சிறுவன் உயிரிழந்த சம்பவம் – நயினார் கண்டனம்!

கும்மிடிப்பூண்டி அருகே அரசு மருத்துவமனை வளாகத்தில் மின்சாரம் தாக்கி சிறுவன் உயிரிழப்பு!

அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக லஞ்ச ஒழிப்பு துறை சோதனை – கே.என்.நேரு

பாகிஸ்தான் அத்துமீறினால் அந்நாட்டு எல்லைக்குள் நுழைந்து தாக்குதல் – பிரதமர் மோடி எச்சரிக்கை!

கே.என் நேரு வீட்டில் சிக்கியது என்ன ?; தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை அறிக்கை

‘Made-in-India’- வரலாற்று சாதனை : செவ்வாய் கிரகத்தில் விண்வெளி வீரர்கள் வசிக்க வீடு ரெடி – சிறப்பு தொகுப்பு!

சீன எல்லையில் Early-warning system : மீண்டும் சீரமைக்க நேபாள அரசு தீவிரம் – சிறப்பு தொகுப்பு!

அவிநாசியில், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய முதல் நிலை ஒப்பந்ததாரர் வேலுமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies