பாஜக 400 எம். பி-கள் தாண்டி ஆட்சியில் அமரும்! - அண்ணாமலை
Sep 6, 2026, 11:49 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பாஜக 400 எம். பி-கள் தாண்டி ஆட்சியில் அமரும்! – அண்ணாமலை

Murugesan M by Murugesan M
Feb 27, 2024, 05:50 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

பிரதமர் மோடி மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்கும் போது  தமிழகத்திலிருந்து 39 எம்பிக்களை லோக்சபாவிற்கு அனுப்புவது உறுதி எனப் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை சூளுரைத்தார்.

திருப்பூர் மாவட்டம், பல்லடத்தில் நடைபெற்ற தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலையின்  ‘என் மண், என் மக்கள்’ பாதயாத்திரையின் நிறைவு விழா பொதுக்கூட்டத்தில்  பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று சிறப்புரையாற்றினார். இவ்விழாவில் பிரதமர் மோடி உள்ளிட்ட தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சித்தலைவர்கள் பங்கேற்றனர்.

விழாவில் பேசிய பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை,

நேரத்தின் அருமை கருதி எல்லோருக்கும் வாழ்த்துக்களை வணக்கங்களை தெரிவித்துக்கொள்கிறன். தமிழ்நாட்டில் நாம் மிகப்பெரிய சரித்திரத்தில் இடம்பெற்றிருக்கிறோம். இத்தனை நாட்கள் எதற்காக காத்திருந்தோமோ அது தற்போது நிகழ்ந்து கொண்டிருக்கிறது.

இன்னும் 60 நாட்கள் மட்டும்தான். நம்முடைய பிரதமர் மோடி மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்பார். 400 எம்பிக்களை தாண்டி ஆட்சியில் அமரும் போது தமிழ்நாட்டில் இருந்து தேசிய ஜனநாயகக் கூட்டணியைச் சேர்ந்த 39 எம்பிக்கள் அழகு சேர்ப்பார்கள்.

எவ்வளவு கடுமையாக இந்த யாத்திரைக்காக உழைத்திருக்கிறோம். இது யாத்திரையின் நிறைவு விழாவாக இருந்தாலும் இன்னும் 60 நாட்கள் இருக்கிறது. கண் துஞ்சாமல் உழைக்க வேண்டும். தமிழ்நாட்டில் இருந்து 39 எம்பிக்களை லோக்சபாவிற்கு அனுப்பும் வரை நமக்கு ஓய்வு இல்லை.

பத்தாண்டுகளுக்குப் பிறகு சரித்திரத்தை திரும்பி பார்க்கும் போது தமிழ்நாட்டின் மாற்றம் பல்லடத்தில் நிகழ்ந்தது. அப்போது பிரதமர் மோடி இருந்தார் நானும் இருந்தேன் அந்த சரித்திரத்தில் இருப்போம்.

பட்டி தொட்டி எங்கும் மோடியின் புகழ் பரவியுள்ளது. ஜல்லிக்கட்டு மீண்டும் தமிழ்நாட்டில் நடைபெற காரணம் பிரதமர் மோடி மட்டுமே என்று தெரிவித்தார். பொய் பரப்புரைகளை வென்று, நாம் வெற்றி பெற வேண்டும். அதற்கு தமிழ்நாட்டில் இருந்து 39 தொகுதிகளை வென்று தர வேண்டும். அனைவரும் அர்ப்பணிப்பு உணர்வோடு பாடுபட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். நீங்கள் கனவு காணும் தமிழகத்தை நாங்கள் உருவாக்குவோம் என்று தெரிவித்தார்.

Tags: En man En makkalbjp k annamalai
Share
Tweet
SendShare
Previous Post

ஹமாஸ் தீவிரவாதிகளின் சுரங்கப்பாதையை அழித்த இஸ்ரேல் இராணுவம்!

Next Post

நிர்மலா சீதாராமன், ஜெய்சங்கர் மக்களவை தேர்தலில் போட்டி! – மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி தகவல்

Related News

கடற்படை கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தினால் ஈரானின் எண்ணெய் கப்பல்கள் முற்றிலும் அழிக்கப்படும் – அமெரிக்கா எச்சரிக்கை!

ஆசிய கோப்பை மகளிர் கிரிக்கெட் – பாகிஸ்தானை பந்தாடியது இந்தியா!

லண்டன் குருத்வாராவில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் வழிபாடு!

தமிழகம் முழுவதும் சுமார் 1.5 லட்சம் இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்க ஏற்பாடு – காடேஸ்வரா சுப்பிரமணியம்

உங்க பையன் தான் காரணம் – புதுக்கோட்டை திமுக செயற்குழு கூட்டத்தில் மோதல்!

சென்னையில் தவெக நிர்வாகி வெட்டிக்கொலை – மர்ம கும்பலை தேடும் போலீஸ்!

Load More

அண்மைச் செய்திகள்

கும்மிடிப்பூண்டி அருகே அரசு மருத்துவமனை வளாகத்தில் மின்சாரம் தாக்கி சிறுவன் உயிரிழந்த சம்பவம் – நயினார் கண்டனம்!

கும்மிடிப்பூண்டி அருகே அரசு மருத்துவமனை வளாகத்தில் மின்சாரம் தாக்கி சிறுவன் உயிரிழப்பு!

அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக லஞ்ச ஒழிப்பு துறை சோதனை – கே.என்.நேரு

பாகிஸ்தான் அத்துமீறினால் அந்நாட்டு எல்லைக்குள் நுழைந்து தாக்குதல் – பிரதமர் மோடி எச்சரிக்கை!

கே.என் நேரு வீட்டில் சிக்கியது என்ன ?; தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை அறிக்கை

‘Made-in-India’- வரலாற்று சாதனை : செவ்வாய் கிரகத்தில் விண்வெளி வீரர்கள் வசிக்க வீடு ரெடி – சிறப்பு தொகுப்பு!

சீன எல்லையில் Early-warning system : மீண்டும் சீரமைக்க நேபாள அரசு தீவிரம் – சிறப்பு தொகுப்பு!

அவிநாசியில், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய முதல் நிலை ஒப்பந்ததாரர் வேலுமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை!

வேளச்சேரி தொகுதி காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ அசன் மவுலானா, தேர்தலில் போட்டியிட 3 ஆண்டுகள் தடை – தேர்தல் ஆணையம்

அரசியல் காரணங்களுக்காக கே.என். நேரு தொடர்புடைய இடங்களில் சோதனை – மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies