சென்னையில் உள்ள தலைமை செயலகத்திற்கு மர்ம நபர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக அரசின் தலைமை செயலகம், சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் செயல்படுகிறது. இச்செயலகத்தில், முதல்வர், அமைச்சர்கள் அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன.
மேலும், தமிழக அரசின் தலைமை செயலாளர் மூத்த இந்திய ஆட்சிப் பணி அலுவலர் ஆவார். இவர் தமிழக அரசின் அனைத்துப் பணிகளுக்கும் பொறுப்பு ஆவார்.
தமிழக அரசு நிர்வாகத்தில் பல்வேறு துறைகள் உள்ளன. இத் துறைகளுக்குத் தனித்தனியாகவும், ஒன்றுக்கு மேற்பட்ட துறைகளுக்கு ஒன்று சேர்ந்து தனித்தனிச் செயலாளர்கள் உள்ளனர். இப்படி முக்கியத்துவம் வாய்ந்த இடமாக தலைமை செயலகம் உள்ளது.
இந்த நிலையில், தனியார் தொலைக்காட்சிக்கு ஒரு போன் வந்துள்ளது. அதில், இன்று, காலை 7.30 மணிக்கு தமிழக அரசின் தலைமை செயலகம் சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் வெடுகுண்டு வெடிக்கும் என தெரிவித்துவிட்டு போனை துண்டித்துவிட்டார்.
இதனையடுத்து, மோப்ப நாய்களை கொண்டு தலைமை செயலகம் முழுவதும் உள்ள முக்கிய அறைகளில் சோதனை நடைபெற்று வருகிறது.