சென்னையில் தி.மு.க நிர்வாகி ஆராவமுதன் மீது மர்ம நபர்கள் நாட்டு வெடிகுண்டு வீசி கொலை செய்துள்ள சம்பவத்தில் 5 பேர் சக்தி நீதிமன்றத்தில் சரண் அடைந்துள்ளனர்.
சென்னை அடுத்துள்ள வண்டலூர் அருகே தி.மு.க வடக்கு ஒன்றிய செயலாளர் ஆராவமுதன் மீது மர்மநபர்கள் நாட்டு வெடிகுண்டை வீசி திடீர் தாக்குதல் நடத்தியுள்ளனர். மேலும், அவரது ஒரு கையைத் துண்டாக வெட்டி எடுத்துச் சென்றுள்ளனர்.
இதனையடுத்து, அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், உயிருக்கு போராடி வந்த ஆராவமுதனை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
ஆனால், அவர் மருத்துவமனை செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். வெடிகுண்டு வீசிய மர்ம நபர்கள் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், தி.மு.க. நிர்வாகி ஆராமுதன் படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில் சத்தியசீலன், அகஸ்டின், முனீஸ் உள்ளிட்ட 5 பேர் நீதிமன்றத்தில் சரண் அடைந்துள்ளனர்.
கொலையாளிகள் அனைவரும் சத்தியமங்கலம் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளனர். நீதிமன்றத்தில் சரணடைந்த 5 பேரில் ஒருவர் மைனர் எனக் கூறப்படுகிறது. கொலையாளிகள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.