தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், கடந்த 10 நாட்களாக ஒரு அதிர்ச்சி சம்பவத்தைப் பார்த்து வருகிறோம். தி.மு.க. ஆட்சி வந்த பிறகு கஞ்சா, சிந்தடிக் டிரக்ஸ் போன்ற பல்வேறு போதைப் பொருட்கள் பொதுவெளியில் சர்வ சாதாரணமாகக் கிடைக்கிறது.
இது போன்ற புகார்களை எனது என் மண், என் மக்கள் பாதயாத்திரையின் போது பெண்கள் என்னிடம் புகாராகத் தெரிவித்தனர். தற்போது, போதை பொருட்கள் பட்டி, தொட்டியெல்லாம், பரவிவிட்டதாக வேதனை தெரிவித்தனர்.
Here’s an appeal from @BJP4TamilNadu to the people of TN to join hands to make our society Drug-free as our repeated requests to the DMK Government in TN have been neglected as their allegiance is with the drug peddlers & not the common people. pic.twitter.com/wAOETBG6xd
— K.Annamalai (@annamalai_k) February 29, 2024
தமிழகத்தில் கடந்த 33 மாதங்களில் வரலாறு காணாத அளவிற்கு டிரக்ஸ் புழக்கம் அதிகமாகியுள்ளது. இந்த போதை பொருள், அரசியல், சினிமா ஆகிய தொடர்புகளைத் தாண்டி வெளிநாடு வரை நீண்டுள்ளது.
திமுகவின் அயலக அணி பொறுப்பாளராக இருந்த ஜாபர் சாதிக் என்பவர், ஒரு சினிமா நிறுவனம் நடத்தி கொண்டு பெரிய டிரக்ஸ் நெட் வொர்க் நிறுவன கும்பல் தலைவராக வலம் வந்துள்ளார். டெல்லி போலீசாரும், நார்கோ டிரக்ஸ் கண்ட்ரோல் போலீசாரும் இணைந்து அவரை நெருங்கியுள்ளனர். 3,500 கிலோ போதை பொருளை பறிமுதல் செய்துள்ளனர். இது தொடர்பாக 4 பேரை கைது செய்துள்ளனர். இதில் முக்கியக் குற்றவாளியான ஜாபர் சாதிக்கை தேடி வருகின்றனர்.
45 கன்சைன்ட்மென்டில் உலர் தேங்காயில் வைத்து சிந்தடிக் டிரக்சை அனுப்பியுள்ளனர். தீங்கு விளைவிக்கக் கூடிய சூடோ எபிட் என்ற சிந்தடிக் டிரக்ஸை பயன்படுத்தி, மெட்டா ஆம்பிடமைன் என்ற பொருளை உற்பத்தி செய்கிறார்கள். இதன் மதிப்பு ரூ. 1500 கோடி ஆகும்.
இதுபோன்று ஒரு நெட் வெர்க் உள்ள ஜாபர் சாதிக்கை தி.மு.க., குடும்பத்தினர் சொந்தம் கொண்டாடி வருகின்றனர். முதல்வர் குடும்பத்தினர் ஜாபர் சாதிக் பாடல் வெளியிட்டு விழாவில் பங்கேற்கின்றனர். மேலும், டி.ஜி.பி. கையால் விருது வாங்குகிறார். இப்படி இருக்கையில் இவரை யார் கைது செய்வார்கள்.
சென்னை நுங்கம்பாக்கத்தில் கூரியர் நிறுவனத்தில் நார்கோ டிரக்ஸ் போலீசார் அதிரடி ரெய்டு நடத்தியுள்ளனர். போதை பொருளை பறிமுதல் செய்துள்ளது மத்திய அரசு.
இதுபோன்ற போதைப் பொருட்களைக் கட்டுப்படுத்தியே ஆக வேண்டும் எனப் பிரதமர் மோடி முடிவு செய்துள்ளார். இதனால், என்.சி.பி.யை உஷார் படுத்திவிட்டோம். மத்திய அரசின் நிறுவனம். எனவே நம்முடைய வீட்டை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு நம்முடைய பொறுப்பு.
இதனை அரசியல் ரீதியாகப் பா.ஜ.க. முன்னெடுக்கும். ஒவ்வொருவரும் தனி மனிதாக நீங்கள் போதைக்கு எதிராகப் போராட முன்வரவேண்டும். அதற்காகவே, இந்த வீடியோ பதிவு. எனவே நாம் அனைவரும் இணைந்து களத்தில் இறங்க வேண்டும்.
இந்த நாட்டைவிட்டே போதை பொருளை ஒழிக்கவேண்டும். கல்லூரி மாணவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். போதை பொருளை கட்டுப்படுவத்துவதில் திமுக அரசு செயல் இழந்துவிட்டது. எனவே, தமிழகத்தை நாம் மீட்டெடுப்போம்.
வரும் காலத்தில் பா.ஜ.க உங்களோடு இணைந்து களம் இறங்கும். இந்தப் பிரச்னைக்கு ஒரு நிரந்தரத் தீர்வை காண்போம் என்று தெரிவித்துள்ளார்.