கர்நாடகா அரசு சட்டம் ஒழுங்கை பராமரிக்க தவறி விட்டதாக பாஜக குற்றம்சாட்டியுள்ளது.
கர்நாடக மாநிலம் பெங்களூரூ ஒயிட்பீல்டு குந்தலஹள்ளியில் பிரபல ராமேஸ்வரம் கபே ஹோட்டல் செயல்பட்டு வருகிறது.இந்த ஹோட்டலில் நேற்று பயங்கர சத்தத்துடன் அடுத்தடுத்து இரு குண்டுகள் வெடித்தன. இதில் அங்கு உணவு சாப்பிட்டுக்கொண்டிருந்த 10 பேர் காயம் அடைந்தனர்.இதுதொடர்பாக தேசிய புலனாய்வு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் கர்நாடகா மாநில அரசு சட்டம் ஒழுங்கை பராமரிக்க தவறி விட்டதாக அம்மாநில முன்னாள் முதலமைச்சர் பசவராஜ் பொம்மை குற்றம்சாட்டியுள்ளார்.
தேசவிரோதிகளுக்கு ஆளும்கட்சித் தலைவர்களின் ஆதரவு பெருகி வருவதால் காவல்துறையினரின் மன உறுதி குறைந்துள்ளதாகவும், காவல்துறை இடமாற்றத்தில் மிகப்பெரிய ஊழல் நடைபெற்றுள்ளதாகவும், திறமையற்றவர்கள் முக்கிய பதவிகளுக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
சமூக விரோதிகள் தற்போது ஊருக்குள் எளிதாக நடமாடுகிறார்கள். பெங்களூரு நகரில் வெடிகுண்டு வைக்கத் துணிந்துள்ளனர். இந்த தாக்குதல் தீவிரவாதம் தொடர்புடையது. பெங்களூரில் சில ஸ்லீப்பர் செல்கள் உள்ளன. பாஜக ஆட்சி காலத்தில், 15 ஸ்லீப்பர் செல்களை கண்டுபிடித்து சிறைக்கு அனுப்பினோம். காங்கிரஸ் அரசு உடனடியாக பதவி விலக வேண்டும் என பொம்மை வலியுறுத்தியுள்ளார்.