மக்களவைத் தேர்தலுக்கான 195 வேட்பாளர்களின் முதல் பட்டியலை பாஜக இன்று வெளியிட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி வாரணாசி தொகுதியில் போட்டியிடுகிறார். குஜராத்தில் காந்தி நகரில் உள்துறை அமைச்சர் அமித்ஷா போட்டியிடுகிறார்.
2024 மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் 195 வேட்பாளர்களைக் கொண்ட முதல் பட்டியலை பாஜக தலைமை வெளியிட்டது. பிரதமர் நரேந்திர மோடி வாரணாசியில் போட்டியிடுவார் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் வினோத் தாவ்டே அறிவித்தார். முதல் பட்டியலில் மத்திய அமைச்சர்கள் 34 பேர், முன்னாள் முதல்வர்கள் இருவரின் பெயர்கள் இடம் பெற்றுள்ளதாக தாவ்டே தெரிவித்தார்.
LIVE: Watch BJP Press Conference at party headquarters in New Delhi. https://t.co/nppQvosHrd
— BJP (@BJP4India) March 2, 2024
பிரதமர் நரேந்திர மோடியைத் தவிர, காந்திநகர் தொகுதியிலிருந்து அமித் ஷா, அருணாச்சல மேற்கு தொகுதியிலிருந்து கிரண் ரிஜிஜு, திப்ருகார் தொகுதியிலிருந்து சர்பானந்தா சோனோவால், வடகிழக்கு டெல்லி தொகுதியிலிருந்து மனோஜ் திவாரி, டெல்லி தொகுதியிலிருந்து பன்சூரி ஸ்வராஜ், போர்பந்தர் தொகுதியிலிருந்து மன்சுக் மாண்டவியா, டெல்லி தொகுதியிலிருந்து சுஸ்மா சுவராஜின் மகள் பன்சூரி ஸ்வராஜ், மத்திய பிரதேசத்தின் குணா தொகுதியிலிருந்து மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா, திருச்சூர் தொகுதியிலிருந்து நடிகர் சுரேஷ், மலப்புரம் தொகுதியிலிருந்து அப்துல் சலாம்,
திருவனந்தபுரம் தொகுதியிலிருந்து மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திர சேகர்,
லக்னோ தொகுதியிலிருந்து ராஜ்நாத் சிங், அமேதி தொகுதியிலிருந்து ஸ்மிரிதி ராணி ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
இந்தப் பட்டியலில் 34 மத்திய அமைச்சர்கள், லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா மற்றும் 2 முன்னாள் முதல்வர்களின் பெயரும் இடம்பெற்றுள்ளது.
இவர்களில் 28 பேர் பெண்கள், 47 வேட்பாளர்கள் 50 வயதுக்குட்பட்டவர்கள், 27 SC வேட்பாளர்கள், 18 ST வேட்பாளர்கள் இடம் பெற்றுள்ளனர். இந்த 195 வேட்பாளர்களில் 57 OBC வேட்பாளர்கள் இடம் பெற்றுள்ளனர்.
29 फरवरी, 2024 को प्रधानमंत्री श्री @narendramodi की गरिमामयी उपस्थिति और श्री @JPNadda की अध्यक्षता में आयोजित केंद्रीय चुनाव समिति की बैठक में आगामी लोकसभा चुनाव हेतु 195 लोकसभा सीटों के लिए बीजेपी उम्मीदवार के नामों पर मंजूरी दी गई। (1/4) pic.twitter.com/Wv8yVYnegK
— BJP (@BJP4India) March 2, 2024
உத்தரப் பிரதேசத்தில் 51, மேற்கு வங்கத்தில் 20, மத்தியப் பிரதேசத்தில் 24, குஜராத் மற்றும் ராஜஸ்தானில் தலா 15, கேரளாவில் 12, தெலங்கானாவில் 9, அசாமில் 11, ஜார்கண்ட் மற்றும் சத்தீஸ்கரில் தலா 11 இடங்களுக்கு வேட்பாளர்களின் பெயர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
டெல்லியில் இருந்து 5 வேட்பாளர்கள், ஜம்மு காஷ்மீரில் இருந்து 2 வேட்பாளர்கள், உத்தரகாண்டில் இருந்து 3 வேட்பாளர்கள், அருணாச்சல பிரதேசத்தில் இருந்து 2 வேட்பாளர்கள் மற்றும் கோவா, திரிபுரா, அந்தமான் & நிக்கோபார் மற்றும் டாமன் & டையூவில் இருந்து தலா ஒரு வேட்பாளர் போட்டியிடுகிறார்.