உலக வன உயிரின தினமான இன்று வனவிலங்கு ஆர்வலர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில், உலக வனவிலங்கு தினத்தில் அனைத்து வனவிலங்கு ஆர்வலர்களுக்கும் வாழ்த்துக்கள். இந்த நாள் நமது கிரகத்தின் நம்பமுடியாத பன்முகத்தன்மையைக் கொண்டாடுவதற்கும், அதைப் பாதுகாப்பதற்கான நமது உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்துவதற்கும் ஏற்ற நாள்.
நிலையான நடைமுறைகளில் முன்னணியில் இருப்பவர்கள் மற்றும் வனவிலங்கு பாதுகாப்பு முயற்சிகளுக்கு ஆதரவளிக்கும் அனைவரையும் பாராட்டுகிறேன் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.