2026-ஆம் சட்டமன்றத் தேர்தலில் திராவிட அரசியல் வேரோடு அகற்றப்படும்! - அண்ணாமலை பேச்சு
Sep 13, 2026, 01:08 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

2026-ஆம் சட்டமன்றத் தேர்தலில் திராவிட அரசியல் வேரோடு அகற்றப்படும்! – அண்ணாமலை பேச்சு

Murugesan M by Murugesan M
Mar 3, 2024, 11:11 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

தமிழகத்தில் ஏற்படவிருக்கும் மாற்றம், வரும் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில், திராவிட அரசியலை வேரோடு அகற்ற அடிப்படையாக அமையும் எனப் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

திருச்சியில் நடைபெற்ற, இந்திய ஜனநாயகக் கட்சியின் ‘தேசம் காப்போம், தமிழை வளர்ப்போம்’ மாநில மாநாட்டில், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பங்கேற்று சிறப்புரையாற்றினார்.

கூட்டத்தில் உரையாற்றிய அண்ணாமலை,

2024 ஆம் ஆண்டு நாம் பேசும், பண அரசியலுக்கு எதிரான, ஊழலற்ற, நேர்மையான அரசியலைக் கொள்கைகளாகக் கொண்டு தொடங்கப்பட்ட இந்திய ஜனநாயகக் கட்சியின் நிறுவனர் டாக்டர் பாரிவேந்தர் ஐயா பெரம்பலூர் தொகுதி பாராளுமன்ற உறுப்பினராக, கடந்த ஐந்து ஆண்டுகளில் தொகுதிக்கும் மக்களுக்கும் செய்துள்ள பணிகள் போற்றுதலுக்குரியவை.

தனது சொந்தப் பணம் சுமார் 127 கோடி ரூபாய், தொகுதி மேம்பாட்டிற்காகச் செலவு செய்து, இந்தியாவின் தலைசிறந்த பாராளுமன்ற உறுப்பினர்களில் ஒருவராக இருக்கிறார்.

ஐயா பாரிவேந்தர் அவர்கள் முயற்சியால், பெரம்பலூருக்கு ரயில் போக்குவரத்து அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்தியாவில் புதிதாகத் தொடங்கவிருக்கும் 100 சைனிக் பள்ளிகளில் முதல் பள்ளி, பெரம்பலூரில் அமைக்கவும், தனது சொந்தப் பணத்தைச் செலவு செய்யத் தயாராகவிருக்கிறார்.

பாரதப் பிரதமர் நரேந்திர மோடி  மூன்றாவது முறையாகப் பிரதமர் பொறுப்பேற்கும்போது, ஐயா பாரிவேந்தர், மீண்டும் பெரம்பலூர் பாராளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர் கொண்டு வர முழுமுயற்சி மேற்கொண்டுள்ள அத்தனை திட்டங்களையும், அவரே தொடங்கி வைக்க வேண்டுமென்பதே அனைவரின் ஆசையும் விருப்பமும்.

அதனை நிறைவேற்ற அனைவரும் நிச்சயம் உழைப்போம். இந்திய ஜனநாயகக் கட்சியின் தலைவர் அண்ணன் ரவி பச்சமுத்து, தமது தந்தையாரை விட ஒரு படி மேலாக, தமிழகத்தின் மீதும், மக்களின் மீதும், சமூகத்தின் மீதும் அளவற்ற பற்று கொண்டவர். அவருக்கும் எனது மனமார்ந்த பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்திய ஜனநாயகக் கட்சியின் மாநில மாநாட்டின் கொள்கையான, தமிழ் வளர்ச்சி, நமது  பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் கடந்த பத்து ஆண்டு கால ஆட்சியில்தான் நிறைவேறிக் கொண்டிருக்கிறது.

உலகம் முழுவதும், தமிழ் மொழியின் பெருமையை நமது பாரதப் பிரதமர் அவர்கள் கொண்டு செல்கிறார். தமிழ் மொழியின் புகழ் மேலும் பரவ, நமது பிரதமர் மோடி அவர்கள், மூன்றாவது முறையாகப் பிரதமர் பொறுப்பேற்க வேண்டும்.

மாநாட்டின் மற்றொரு கொள்கையான தேசம் காப்பது, பிரிவினை பேசும் திராவிட அரசியலை அழிப்பதில்தான் முழுமை பெறும். வரும் 2024 பாராளுமன்றத் தேர்தலில், தமிழகத்தில் ஏற்படவிருக்கும் மாற்றம், வரும் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில், திராவிட அரசியலை வேரோடு அகற்ற அடிப்படையாக அமையும். கடந்த 33 மாதமாக ஆட்சியில் இருக்கும் திமுக ஒரு சாதனை செய்யாமல், மத்திய அரசைக் குற்றம் சாட்டி வருகிறது எனத் தெரிவித்தார்.

ராஜராஜ சோழன் போல், நாடாளுமன்றத்தில் செங்கோலை சாட்சியாக வைத்து, பிரதமர் மோடி ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறார். தமிழ் மொழி மூத்த மொழியாக இருந்தாலும், நாட்டில் உள்ளவர்கள் அதன் கலாசாரத்தை முழுமையாக தெரிந்து கொள்ளவில்லை. அந்த கூட்டில் இருந்து விடுவித்து, உலகம் முழுவதும் படம் பிடித்துக் காட்டுவதற்கு பிரதமர் மோடி தேவைப்பட்டு இருக்கிறார்.

தமிழ் மொழி வளர, தமிழகம் சிறக்க, வளர்ச்சி அரசியலை தமிழகம் முன்னெடுக்கும். இந்திய ஜனநாயகக் கட்சியின் இந்த தேசம் காப்போம் தமிழை வளர்ப்போம் மாநில மாநாட்டின் மாபெரும் வெற்றி, ஊழலற்ற, நேர்மையான, சாமானிய மக்களுக்கான, தேசியம் சார்ந்த அரசியலைப் பேசும் அனைத்து சக்திகளுக்கும் மாபெரும் உந்து சக்தியாக அமைந்திருக்கிறது எனத் தெரிவித்தார்.

Tags: bjpbjp k annamalai
Share
Tweet
SendShare
Previous Post

நாட்டின் தேசிய பாதுகாப்பு குறிப்பிடத்தக்க வகையில் முன்னேற்றம் : ஆளுநர் ஆர்.என்.ரவி

Next Post

உலக வன உயிரின தினம் : பிரதமர் மோடி வாழ்த்து!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies